வாத்தி ரெய்டு தொடங்கியது.. கடைகள், மால்களில் விசாரணை செய்யும் டிரம்ப் டீம்.. இந்தியர்களுக்கு செக்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவி ஏற்பை தொடர்ந்து அங்கே வசிக்கும் இந்திய மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சமீபத்தில் இந்தியர்கள் பலர் நாடுகடத்தப்பட்ட நிலையில் வரும் நாட்களில் இந்திய மாணவர்கள் பலர் நாடு கடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
கடந்த ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா வழங்கிய F-1 மாணவர் விசாக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை தரவுகளின்படி, ஜனவரி முதல் செப்டம்பர் 2024 வரை 64,008 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,03,495 ஆக இருந்தது. இரண்டையும் ஒப்பிடும்போது 38 சதவீதம் வீழ்ச்சியாகும்.

டிரம்ப் இந்தியர்களை நாடு கடத்த தொடங்கி உள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களின் பார்ட் டைம் வேலைகளை விட தொடங்கி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள மால்களில், கடைகளில் இதற்காக ரெய்டு நடத்தப்படுகிறது. மாணவர்கள் யாராவது பார்ட் டைம் வேலை பார்த்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து முடித்து முறைகேடாக over stay செய்கிறார்கள். அதாவது படிப்பிற்கான விசா முடித்து.. அதன் அவகாசம் முடிந்தும் பலர் முறைகேடாக over stay செய்கிறார்கள். சிலர் படிப்பு விசா வாங்கி பார்ட் டைம் வேலை பார்க்கிறார்கள்.
இதை இந்தியர்கள் பலர் பாக்கெட் மணி பெற வேண்டும் என்று செய்கிறார்கள். இவர்களை எல்லாம் டிரம்ப் வரும் காலத்தில் கணக்கெடுத்து ஆக்சன் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க சட்டப்படி மாணவர் விசா வாங்கியவர்கள்.. பார்ட் டைம் வேலை பார்க்க முடியாது.
கணக்கெடுக்கும் பணி:
அமெரிக்கா முதலில் அங்கே தங்கி உள்ள விசா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும். படிப்பிற்கு விசா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கு எடுக்கும். சுற்றுலா விசா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும். எச் 1 பி விசா காலாவதி ஆனவர்களை கணக்கு எடுக்கும்.. பணிகள் நடக்கின்றன.
இனி இவர்கள் கைது செய்யப்படுவார்கள்.அதன்பின் இந்திய அரசிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கும். ஒன்று இந்திய விமானத்தில் அவர்களை நாட்டிற்கு அழைத்து செல்வது. இந்தியர்களுக்கு நாடு கடத்தும் பணிகள் நடக்கும்.
அங்கே இந்திய மாணவர்களை வேலைக்கு எடுக்கும் நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன. இந்திய மாணவர்களை பார்ட் டைமாக வேலைக்கு எடுக்கும் பணிகளை அந்நாட்டு நிறுவனங்கள் தடுத்துள்ளன.
அமெரிக்காவில் படிக்கும் பல இந்திய மாணவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் தங்கள் பணியிடங்களுக்குச் சென்று, தங்களின் ஐடிகளைப் பார்க்க வேண்டும் அல்லது பணி அங்கீகார ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று சோதனை செய்ய தொடங்கி உள்ளனர் என்று அங்கே வசிக்கும் இந்திய மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை. அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடுகடத்த இந்தியா திட்டம் போட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம். அமெரிக்காவின் வரி விதிப்பை தடுக்க இந்தியா இந்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பலரை இந்தியா நாடு கடத்த திட்டமிட்டு உள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications