மொத்த போகஸையும் திருப்பிய அமெரிக்கா.. இந்தியா - பாகிஸ்தான் போர் வரப்போகிறது? என்ன நடக்குது ?
நியூயார்க்: பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு நாட்டு உறவு வேகமாக மோசமாகி வருகிறது. இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் Tammy Bruce இது தொடர்பாக கூறி உள்ளார். இப்போது நிலைமை மோசமாகிவிட்டது. தற்போது நிலவுவது ஒரு பயங்கரமான சூழ்நிலை. இதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் குறித்து அமெரிக்கா இதுவரை நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள். இரண்டு நாடுகளின் கைகளின் அணு ஆயுதம் இருப்பதை விட அவை அருகருகே இருக்கும் நாடுகள். அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நிலைமையை மோசமாகாமல் காக்க வேண்டும் என்று இரு அரசாங்கங்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர ஆலோசனைகள் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்
இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு தேவையான உதவிகளை செய்ய போவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சவுத் பிளாக் அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர். இஸ்ரேலிய தூதர் ருவென் அசார், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை பற்றி பேசுகையில்.. இது மிக முக்கியமான தருணம். ஐஸ் உடைந்தது போன்ற முக்கியமான தரும். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. பல முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தோம்.
இங்கு நடந்த பயங்கர தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம்; இது மிக முக்கியமான தருணம். நிச்சயமாக, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகிய இரண்டிலும் முக்கிய விஷயங்களை நாங்கள் விவாதித்தோம். சிறந்த ஒத்துழைப்பு வழங்கபோகிறோம், நாங்கள் சிறந்த பங்காளிகள், என்று கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், இங்கே தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இந்தியாவுடன் நிற்போம். இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியா உடன் நாங்கள் நிற்கிறோம், என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மீது நடவடிக்கை
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.
நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம். பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்த வாய்ப்புகள் உள்ளன. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என்கவுண்டர் செய்யலாம். அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம்.
கடற்படையை பாகிஸ்தான் அருகே கொண்டு சென்று அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அதேபோல் ஏவுகணை தாக்குதல், விமான தாக்குதல்களை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications