உலகத்திற்கே சிக்கல்.. அமெரிக்கா தூண்டிவிடுகிறது.. இஸ்ரேலின் பயங்கர பிளான்.. பதறி ஓடிய ஈரான்!
நியூயார்க்: அமெரிக்கா தேவையில்லாமல் பிரச்சனைகளை தூண்டுகிறது.. ஈரானை தாக்குதவதற்கு இஸ்ரேலை அமெரிக்கா தூண்டி விடுகிறது. அமெரிக்காவின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.. என்று ஈரான் எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக ஐநாவிடம் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானை இஸ்ரேல் தாக்குவதற்கு பின் அமெரிக்கா உள்ளது. இஸ்ரேலை அமெரிக்கா தூண்டிவிட்டுக்கொண்டு இருக்கிறது. இஸ்ரேல் ஈரானை தாக்கினால் அதற்கு முழு பொறுப்பு அமெரிக்காதான். பிடன் இந்த விவகாரத்தில் இஸ்ரேலை தூண்டி விடுகிறார். இப்படிப்பட்ட காரணத்தால் அமெரிக்காதான் இந்த பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

ஈரானின் இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக இஸ்ரேலின் எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேலை பின்னால் இருந்து செயல்படுத்தும் அமெரிக்கா தனது செயலுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பேரழிவை விளைவிக்கும்..உலக அமைதிக்கு ஊரு விளைவிக்கும் செயலை அமெரிக்கா செய்து கொண்டு இருக்கிறது. உலகின் பாதுகாப்பிற்கே இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரித்து உள்ளது.
டிரம்ப் தூண்டுதல்: முன்னதாக ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில்.. இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபரும், அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈரானின் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
மோசமான சூழல்: சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்துவதற்கான நாளை இஸ்ரேல் குறித்துவிட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது. நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் அந்நாட்டு அரசிடம் தெரிவித்து உள்ளார்களாம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடக்கும். இஸ்ரேல் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும். ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் பிடனின் இந்த கோரிக்கையை நெதன்யாகு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications