நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் அசத்தும் "தமிழர்".. பென்சில்வேனியாவில் கொடி நாட்டிய "டாக்டர்".. யார் இந்த அரவிந்த்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை தேர்தலில் பென்சில்வேனியாவின் புதிய மாவட்டமான 30வது மாவட்டத்தில் அரவிந்த் வெங்கட் வென்றுள்ளார். இவர் தமிழர்.

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலான் மிட்டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. செனட் சபையில் 35 இடங்களில் 18 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 12ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 6 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது.

தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 41 செனட்டர்கள், ஜனநாயக கட்சிக்கு 40 பேர்உள்ளனர். பெரும்பான்மைக்கு 51 பேர் தேவை. பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களில் 160 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 101ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 59 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது.

‛‛கோலாகலம்’’.. அமெரிக்காவில் தமிழ் குடும்பங்கள் கூடி கொண்டாடிய தீபாவளி.. பாரம்பரிய உடையில் அசத்தல் ‛‛கோலாகலம்’’.. அமெரிக்காவில் தமிழ் குடும்பங்கள் கூடி கொண்டாடிய தீபாவளி.. பாரம்பரிய உடையில் அசத்தல்

தேர்தல்

தேர்தல்

இந்த நிலையில்தான் அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை தேர்தலில் பென்சில்வேனியாவின் புதிய மாவட்டமான 30வது மாவட்டத்தில் அரவிந்த் வெங்கட் வென்றுள்ளார். இவர் தமிழர். அங்கு 30வது மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் ஆகும். இவர் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு இவர் வென்றுள்ளார். அவசர கால மருத்துவராக இவர் பணியாற்றி வந்தார்.

பென்சில்வேனியா

பென்சில்வேனியா

1960க்கு பின் அங்கு மருத்துவர் ஒருவர் மாகாண பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாவது இதுவே முதல்முறை. அதோடு 2006ல் இருந்து பென்சில்வேனியாவில் குடியரசு கட்சி வேட்பளார்கள் வெற்றிபெறும் சீட்டில் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வென்றதே இல்லை. ஒரு காலத்தில் 30வது மாவட்டம் குடியரசு கட்சியின் கோட்டையாக இருந்தது. அதன்பின் இந்த மாவட்டம் நீக்கப்பட்டது.

அரவிந்த் வெங்கட்

அரவிந்த் வெங்கட்

தற்போது மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் அதிசயமாக ஜனநாயக கட்சி சார்பாக அரவிந்த் வென்றுள்ளார். இளம் வயதிலேயே இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்னையில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிக்கு இடையில் இங்கு கடுமையான மோதல் நிலவியது.

மருத்துவர்

மருத்துவர்

இவரை எதிர்த்து போட்டியிட்டது சிண்டி கிரீக் என்ற மருத்துவ பணியாளர் ஆவார். குடியரசு கட்சியை சேர்ந்த அவர் 3500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்து உள்ளார். இருந்தாலும் அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் வெற்றிபெறுவது இதுவே முதல்முறையாகும். அருணா மில்லர், அரவிந்த் வெங்கட், கிருஷ்னமூர்த்தி என்று அமெரிக்காவில் பல்வேறு தமிழர்கள் இந்த தேர்தலில் அடுத்தடுத்து வென்று வருகிறார்கள்.

English summary
USA Mid Term Elections: Doctor Aravind Venkat wins the new 30th district of Pennsylvania.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X