சும்மா இல்லை.. இந்தியாவை சீண்ட முடியாது.. இறங்கி வந்த டிரம்ப்.. மோடிக்கு அவசர அவசரமாக போன்?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விரைவில் தொலைபேசியில் பேச வாய்ப்புள்ளது. இரு தலைவர்களுக்கிடையேயான உறவில் கடந்த சில நாட்களாக மோதல்கள் நிலவி வந்த நிலையில், இந்த உரையாடல் உறவை மேம்படுத்தும், பிரச்சனைகளை சரி செய்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 35 நிமிடங்கள் இருவரும் பேசிய போது.. அது பிரச்சனையில் முடிந்தது.
அதன்பின் மோடி உடன் 4 முறை பேச டிரம்ப் முயன்றும் கூட மோடி அதை ஏற்கவில்லை. இந்த நிலையில்
இரு தலைவர்களும் விரைவில் பேச ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரம்ப், "என் நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரவிருக்கும் வாரங்களில் பேச ஆவலுடன் உள்ளேன்" என்று புதன்கிழமை கூறினார். மோடியும் உடனடியாக சமூக வலைத்தளத்தில் பதிலளித்தார்: "அதிபர் டிரம்புடன் பேச நானும் ஆவலுடன் உள்ளேன். நம் இரு நாட்டு மக்களுக்கும் ஒளிமயமான, வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க இணைந்து பணியாற்றுவோம்." டிரம்ப் பின்னர் பிரதமர் மோடியின் ட்வீட்டை Truth Social-இல் மறுபதிவு செய்தார்.

இந்தியா டிரம்ப் உறவு
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், அவை விரைவில் எவ்வித சிரமமும் இன்றி முடிவுக்கு வரும் என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். QUAD உச்சி மாநாட்டை திட்டமிடுவது மற்றும் வரவிருக்கும் UNGA மாநாடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் இடையே விரைவில் ஒரு தொலைபேசி அழைப்பு நிகழும் என்று உயர் அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் பேச இந்த தொலைபேசி அழைப்பு வாய்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் மோடி போன் கால்
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விரைவில் தொலைபேசியில் பேச வாய்ப்புள்ளது. இரு தலைவர்களுக்கிடையேயான உறவில் கடந்த சில நாட்களாக மோதல்கள் நிலவி வந்த நிலையில், இந்த உரையாடல் உறவை மேம்படுத்தும், பிரச்சனைகளை சரி செய்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவில் இறுக்கம் தளர்ந்தது என்றார்
இந்தியா - அமெரிக்கா இயற்கையான நட்பு நாடுகள், இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் சரியாகிவிட்டது. இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடுகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது பல மாதங்களாக அவர் இந்தியாவுக்கு எதிராகக் கூறி வந்த விமர்சனங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு ஆதரவாக பேசி உள்ளார்.
இந்தியா டிரம்ப் வரி
ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார். இதனால் மேற்கண்ட வரிகள் விரைவில் நீக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications