பீட்சாவை வைத்து மாஸ்டர்பிளான்.. வெனிசுலா ஆபரேஷனால் பல கோடி லாபம் பார்த்த நபர்.. ஸ்டன் ஆன அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்கப் படைகள் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்ததை அடுத்து, 'பாலிமார்கெட்' (Polymarket) மூலம் சில வர்த்தகர்கள் மிகப்பெரிய லாபம் ஈட்டியுள்ளனர். அதாவது அங்கே ஆட்சி கவிழும், அதிபர் கைது செய்யப்படுவார் என்று பெட் கட்டி அதன் மூலம் பல கோடிகளை இவர்கள் லாபமாக ஈட்டி உள்ளனர்.
பாலி மார்க்கெட் என்பது பங்குசந்தைகளுக்கு வெளியே உள்ளே மார்க்கெட் ஆகும். இது எந்த நாட்டின் மத்திய வங்கிக்கும் கீழும் வராது. இந்த மார்க்கெட்டில் உலக அரசியல், தேர்தல், விளையாட்டு என்று பல விஷயங்கள் தொடர்பாக பெட் கட்டி ஆட முடியும். அதன் அடிப்படியில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். அந்த வகையில் வெனிசுலா ஆட்சி கவிழப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த சில தலைகள் அதன் வழியாக பெட் கட்டி வென்றுள்ளனர்.

பல கோடிகளை வென்ற நபர்கள்
ஒரு வர்த்தகர் ₹25 லட்சம் பந்தயம் வைத்து ₹3.3 கோடியாக மாற்றியுள்ளார். டிரம்ப்பின் அறிவிப்புக்குச் சில மணிநேரங்களுக்கு முன்பே இந்தப் பந்தயம் வைக்கப்பட்டது, இது 'உள்ளக வர்த்தக' (insider trading) கவலைகளை எழுப்பி விவாதங்களை உண்டாக்கி உள்ளது. வெனிசுலாவில் ஆட்சி கவலைபோவதை அவர் எப்படி முன்கூட்டியே அறிந்தார் என்ற கேள்வி உள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் உருவாக்கப்பட்ட ஒரு 'பாலிமார்கெட்' கணக்கு, இந்த விவாதங்களுக்கு மையப்புள்ளியானது. இந்தக் கணக்கு வெள்ளிக்கிழமை அன்று மதுரோவின் வெளியேற்றம் குறித்த பந்தயத்தில் $30,000 (சுமார் ₹27 லட்சம்) முதலீடு செய்தது
டொனால்ட் டிரம்ப், கரகாஸ் நகரில் நடந்த இரவுநேரத் தாக்குதல்களைத் தொடர்ந்து மதுரோவை அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்ததாக அறிவித்தர். அதிபர் மதுரோவின் கைதுக்குப் பிறகு, அந்த பந்தயம் $436,759.61 (சுமார் ₹3.93 கோடி) லாபத்தை ஈட்டியதாக 'ஆக்சியோஸ்' தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 3, 2026 அன்று ஜோ பொம்பிலியானோ (Joe Pompliano) தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பதிவில், "புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு 'பாலிமார்கெட்' கணக்கு, மடூரோ வெளியேற்றம் குறித்து $30,000க்கு மேல் முதலீடு செய்தது. அமெரிக்கா அவரை ஒரே இரவில் கைது செய்ய, வர்த்தகர் 24 மணி நேரத்திற்குள் $400,000 லாபத்தைப் பெற்றார். இது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார். ," என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு 'பாலிமார்கெட்' வர்த்தகர், மடூரோ கைது குறித்து பந்தயம் கட்டி $80,000 (சுமார் ₹72 லட்சம்) ஈட்டியுள்ளார். பென்டகன் (Pentagon) பகுதியிலுள்ள 'டொமினோஸ் பிஸ்ஸா' கடைகளில் இருந்து அதிகரிக்கும் ஆர்டர்களைக் கவனித்ததே தனது வெற்றிக்குக் காரணம். இந்த அதிகரித்த ஆர்டர்கள், இரவுநேர அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணிகள் அதிகரிப்பதற்கான குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
வெனிசுலா மூலம் வென்ற நபர்கள்
ஜனவரி 3, 2026 அன்று 'ஸ்வீட்சீக்ஸ்' (Sweetcheeks) என்ற பயனர் 'எக்ஸ்' தளத்தில் இதனை விளக்கினார்: "அமெரிக்கா உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கிக் கப்பலை கொண்டுவந்ததிலிருந்து ஒரு தாக்குதல் நிச்சயம் நடக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் எப்போது எனத் தெரியாது. எனவே, பென்டகன் சுற்றியுள்ள டொமினோஸ் பிஸ்ஸா ஆர்டர்களைக் கண்காணிக்க நான் ஒரு 'வைப் கோடட் போட்' (vibe coded bot) உருவாக்கினேன்."
இந்த லாபங்கள் குறித்த கேள்விகளுக்கு 'பாலிமார்கெட்' உடனடியாக பதிலளிக்கவில்லை. பலருக்கும் இந்த செயல்பாட்டின் நேரம் ஆச்சரியத்தை அளித்தாலும், அரசியல் மோதல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளில் முன்னறிவிப்பு சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது புதிதல்ல. எனவே, மதுரோவின் கைது குறித்த பந்தயங்களும் ஆர்வத்தை ஈர்ப்பது இயல்பே.












Click it and Unblock the Notifications