டிரம்ப்பிற்கு திடீரென.. போனை போட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்.. இந்த விஷயம்தான் மேட்டரே.. அப்படி போடு!
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தது உள்ளார். இது தொடர்பாக டொனால்ட் டிரம்பிற்கு ஜி ஜின்பிங் போன் செய்துள்ளார்.
அதோடு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுவான உரையாடல் மற்றும் தொடர்பு எப்போதும் இருக்க வேண்டும்.. இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளும் தங்கள் வேறுபாடுகளை போக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பரஸ்பர நன்மை பயக்கும் செயல்களை செய்ய வேண்டும். நாம் புதிய நூற்றாண்டில் இருக்கிறோம். இதில் ஒன்றிணைந்து பணிகளை செய்ய வேண்டும். இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக பணிகளை செய்ய வேண்டும் என்று இந்த போன் காலில் ஜி ஜின்பிங் டொனால்ட் டிரம்ப்பிடம் பேசி உள்ளார்.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் சீனா மீதான கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்து வந்தார். முக்கியமாக ராணுவ ரீதியாக தென் சீன கடலில் அழுத்தம், வரிகளை விதிப்பது என்று சீனாவிற்கு அழுத்தம் கொடுத்தார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தைவான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடல் எல்லை விவகாரம் போன்ற பிரச்சினைகளில் தொடர்ந்து பதட்டங்கள் நிலவினாலும்.. இரண்டு நாட்டு தலைவர்கள் இப்படி போன் மூலம் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்படி பல பிரச்சனைகள் நிலவி வந்தாலும்.. அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு நாட்டு உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சீனா இறங்கி வந்துள்ளது.
உலக அரசியல் முக்கியம்: அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில்.. உலக அரசியலில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவிகள் கண்டிப்பாக அதிகரிக்கும். இஸ்ரேல் கசாப் போரை முடிக்க அழுத்தம் கொடுக்கும்.
டிரம்ப் என்னதான் கோபமாக பேசினாலும்.. சீன அதிபர், வடகொரியா அதிபர்களை நேரில் சந்தித்து பேசினார். அதனால் அவர் அமைதி பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார். டாலர் வர்த்தகத்தை மேற்கொள்ளாத நாடுகள் மீது ஆக்சன் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. பல நாடுகள் டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் நிலையில்.. அதை டிரம்ப் தடுக்கலாம்.
தெற்கு சீனா கடலோர பிரச்சனைகள் மீண்டும் ஏற்படும். இதனால் நிலைமை மோசமாகலாம். டிரம்ப் காலத்தில்தான் இங்கே பதற்றம் அதிகரித்தது. டிரம்ப் ரஷ்யாவிற்கு கொஞ்சம் நெருக்கம் என்பதால்.. ரஷ்யாவுடன் கொஞ்சம் நட்பாக செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
இவர் சீனாவிற்கு கடும் எதிரி என்பதால் இந்தியாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் இந்தியாவிற்கு சாதகமான சர்வதேச அரசியல் சூழல் உருவாகும். முக்கியமாக மோடியுடன் இவருக்கு உள்ள நட்பு முக்கியம். இஸ்ரேலுக்கு நேரடியாக இவர் தரும் ஆதரவால் ஈரானுக்கு சிக்கல் ஏற்படும். முக்கியமாக ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும்.
காசா போர் முடியும் வாய்ப்புகள் ஏற்படும். அதாவது ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தது டிரம்ப்தான். அதோடு இஸ்ரேல் காசா தாக்குதலை வேகமாக நடத்தி அனைத்தையும் முடிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். 3ம் உலகப்போருக்கு மிக நெருக்கமாக உலக நாடுகள் இருப்பதாக.. முக்கியமாக அமெரிக்கா இருப்பதாக அமெரிக்கா அதிபர் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அவர் வருவதால் அதை நோக்கி நிகழ்வுகள் செல்லலாம்.












Click it and Unblock the Notifications