300 ஆண்டு அமைதி.. வெடித்தால் ஒரே நிமிடத்தில் கிட்டதட்ட பாதி அமெரிக்கா கடலில் மூழ்கும்! பகீர் வார்னிங்
நியூயார்க்: உலகில் நமது கண்ணுக்குத் தெரியாமல் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. அதைத் தெரிந்து கொள்ளவே ஆய்வாளர்கள் இப்போது தீவிரமாக முயன்று வருகின்றனர். இந்த மாற்றங்களைத் தெரிந்து கொண்டால் பூமியில் ஏற்படக்கூடிய பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தலாம். அல்லது அதன் பாதிப்புகளையாவது குறைக்கலாம். இதற்கிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவைச் சீக்கிரமே பேரழிவு தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சுகள் இருக்கிறது. ஏஐ வளர்ச்சி ஒரு பக்கம் என்றால் ஏஐ ஏற்படுத்தக்கூடிய பேரழிவு குறித்தும் அது எந்தளவுக்கு ஆபத்தானதாக மாறலாம் என்பது குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகிறது. ஏஐ குறித்தே பேச்சுகள் இருப்பதால் உண்மையில் பூமி எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த கவனம் குறைந்துவிட்டது.

அமெரிக்காவில் ஆபத்து
இந்தச் சூழலில் தான் PNAS எனப்படும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் எச்சரிக்கை பலரது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இது வட அமெரிக்கா எதிர்கொள்ளும் இயற்கை பேரழிவு அச்சுறுத்தல்கள் குறித்து வார்ன் செய்வதாக இருக்கிறது. இது அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா வரை இருக்கும் 1,000 கி.மீ நீளமுள்ள காஸ்கேடியா சப்டிடக்ஷன் மண்டலம் (Cascadia Subduction Zone) குறித்து கவலைகளை எழுப்புவதாக இருக்கிறது.
300 ஆண்டு அமைதி
இந்த காஸ்கேடியா மண்டலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருக்கிறது.. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "இது அமைதியாக இருக்கிறது ஓகே. ஆனால் ஒரு கட்டத்தில் நிச்சயம் இது உடையும். அப்போது அது அமெரிக்காவில் மிகப் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும். இதனால் கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் மற்றும் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா வரை பாதிப்பு ஏற்படும். கடலோர நகரங்களை 100 அடி உயரம் கொண்ட சுனாமி தாக்கும் ஆபத்தும் இருக்கிறது" என்கிறார்கள்.
நிமிடங்களில் பேரழிவு
பேராசிரியர் டினா டுரா என்பவர் நடத்திய ஆய்வில், ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும்போது, பெரிய நிலப்பரப்புகள் சில நிமிடங்களில் 0.5 முதல் 2 மீட்டர் வரை மூழ்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேராசிரியர் டுரா கூறுகையில், "காலநிலை மாற்றத்தால் கூட ஆண்டுக்கு அதிகபட்சம் 4 செமீ வரை மட்டுமே கடல் நீர்மட்டம் உயரும். ஆனால், இங்கு நிலநடுக்கத்தால் நிமிடங்களில் இரண்டு மீட்டர் வரை கூட நிலம் மூழ்குகிறது. ஆனால், இதைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை" என்றார்.
அதேநேரம் அனைத்துக் கடலோரப் பகுதிகளும் ஒரே போலப் பாதிக்கப்பட்டதாம். அமெரிக்காவின் சில நகரங்களின் நிலம் டெக்டோனிக் நகர்வுகளால் உயர்ந்து வருகிறது. இதனால் அங்குப் பாதிப்புகள் சற்று குறைவாக இருக்கலாம். அதேநேரம் பெரும்பாலான அமெரிக்கக் கடலோரப் பகுதிகள் இந்த காஸ்கேடியா சப்டிடக்ஷன் மண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தால் பேரழிவைச் சந்திக்கும் என்பதே ஆய்வாளர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது.
கவனம் தேவை
காலநிலை மாற்றம் காரணமாகக் கடல் மட்ட உயர்வு மெதுவாக இருந்தாலும், திடீர் பூகம்பத்தால் ஏற்படும் நிலச்சரிவு அச்சுறுத்தல் பெரிய பிரச்சினையாக மாறலாம். பூமிக்கு அடியில் டெக்டோனிக் நகர்வுகள் இந்தப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் நாம் உரிய கவனம் செலுத்தாமல் இருந்தால் நொடிகளில் பேரழிவு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications