ஆரம்பமே அல்லோகலம்.. டிரம்ப் பதவி ஏற்கும் 24 மணி நேரத்திற்கு முன்.. குண்டை போட்ட விவேக் ராமசாமி
நியூயார்க்: அரசாங்கத் திறன் துறையின் ("DOGE") தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்று அறிவித்தார்.

இன்று அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, யு.கே போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவில் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பான வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு டிரம்ப் தனக்கு நெருக்கமான செனட்டர் மார்கோ ரூபியோவை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியை கொண்டு வர டிரம்ப் இருப்பதாக செய்திகள் வந்தன.
ஆனால் விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சிக்கு.. வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ரூபியோ. இவரின் தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றது.
புதிய பதவி:
இதையடுத்தே அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்று அறிவித்தார். அரசாங்க அதிகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுகட்டமைப்பதற்கும் வழி வகுக்கும் வகையில்.. தேவையற்ற நேரம், பணம் வீணாவதை தடுக்கும் விதமாகவும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த துறைக்கு இவர்கள் இருவரும் தலைமை தங்குவார்கள்.
"சேவ் அமெரிக்கா" என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சரியாக பணிபுரிகிறார்களா.. அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள்.. எங்கே நேரம் செலவாகிறது.. எங்கே பணம் வீணடிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது இனி மஸ்க் ஆக்சன் எடுக்க முடியும்.
இவர் பட்ஜெட் தாக்கல் தொடங்கி பல முக்கிய முடிவுகளில் நேரடியாக பங்கேற்பார். அரசின் நேரடி துறை இது என்றாலும்.. இது நியமன துறைதான். அரசின் அதிகாரபூர்வ துறை கிடையாது. இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எலான் மஸ்க் வரும் நாட்களில் பல முக்கியமான முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
ஷாக் முடிவு:
இப்படிப்பட்ட நிலையில்தான் அரசாங்கத் திறன் துறையின் ("DOGE") தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கும் DOGE குழுவில் இருப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதோடு DOGE குழுவில் ஏற்கனவே மஸ்க் தலைவராக உள்ளதாக கருத்து வேறுபாடு கண்டிப்பாக ஏற்படும். இதோடு ஒஹையோ கவர்னராக பொறுப்பேற்க விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த தேர்தலில் நிற்க உள்ளார். இதையடுத்தே DOGE குழு தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications