குண்டை தூக்கி போட்ட ஆய்வு.. 3 பேரில் ஒருவருக்கு இது பாதிக்குமாம்.. லாங்க் கோவிட் குறித்த புது தகவல்

லாங்க் கோவிட் குறித்து புது தகவல் ஒன்றை அமெரிக்க ஆய்வு வெளியிட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தொற்றில் இருந்து குணமானாலும், லாங்க் கோவிட் விடாமல் விரட்டும் என்றும், 3 பேரில் ஒருவருக்கு, பக்க விளைவுகள் ஏராளமாக ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க ஆய்வு ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு பரவி வந்த நிலையில், ஓமிக்ரான் பரவல் பீதியை கிளப்பியது.. இப்போது 3-ம் அலை வரப்போவதாக சொல்கிறார்கள்..
இதற்கும் காரணம் ஒமிக்ரான் வைரஸ்கள்தான்.. இதற்கு லாங்க் கோவிட் என்கிறார்கள்.. சமீபத்தில் இந்த லாங்க் கோவிட் பற்றியும் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பற்றியும் உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.

 அறிகுறிகள்

அறிகுறிகள்

அதில், கொரோனாவில் இருந்து குணமானாலும் சில அறிகுறிகள் அவருக்குள் தொடர்ந்து பல மாதங்களுக்கு இருக்குமாம்.. அதனால் லாங்க் கோவிட் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு தேவை.. இது தொடர்பான முறையான வழிகாட்டுதல்களை உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.. இந்த லாங்க் கோவிட் தாக்கப்படும் நபர்களுக்கு வாசனை அறிய முடியாது.. சுவையும் அறிய முடியாது.. கொரோனாவில் இருந்து விடுபட்ட பின்பும் நீண்ட காலம் இந்த பாதிப்பு இருக்ககூடும்..

வாசனை

வாசனை

அதிலும் குறிப்பாக, கொரோனாவில் இருந்து விடுபட்ட 70 சதவீதம் இத்தகைய அறிகுறிகள் தெரியும். ஆனால், பெரும்பாலானோருக்கு குணமடைந்ததும் மறுபடியும் வாசனை, சுவை தெரியும் என்றாலும்கூட, சிலருக்கு தெரியாமல் இத்தகைய அறிகுறிகள் நீடிக்கும்... இதுபோன்றவர்களுக்குதான் லாங்க் கோவிட் இருக்கக்கூடும்.. கொரோனாவில் இருந்து விடுப்பட்டு நாட்கள் கடந்தும்கூட, வாசனையை நுகர முடியவில்லை என்றால் அதற்கு பரோஸ்மியா (parosmia) என்பார்கள்..

வாசனைகள்

வாசனைகள்

பல மாதங்களுக்கு இருமல், மனஅழுத்தம், மூச்சு அறிகுறிகள் ஏற்பட்டாலும் அதுவும் லாங்க் கோவிட்தான்.. வித்தியாசமான வாசனை வந்தால் அதுவும் லாங்க் கோவிட்தான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், லாங்க் கோவிட் பற்றின புது தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.. கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கையும் ஜர்னல் ஆப் ஜெனரல் இன்டர் மெடிசின் என்ற பத்திரிகையிலும் வெளியிட்டுள்ளது.

 நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

அதில் தொற்று பாதித்த மூன்றில் ஒருவருக்கு லாங்க் கோவிட் எனப்படும் நீண்டகால கோவிட்-19 தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. "கோவிட் 19 தொற்று பாதித்தவர்களில் பலர் இந்த லாங்க் கோவிட் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு தொற்றில் இருந்து மீண்டபின்னரும், பக்க விளைவுகளாக ஏராளமான உபாதைகள் தென்படுகின்றன. நீரிழிவு நோய் மற்றும் அதிக உடல் பருமன் கொண்ட நபர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்கள் ஆகியோருக்கு இந்த நீண்ட கால கோவிட் பாதிப்பு பிரச்னை ஏற்படுகிறது.

 தொல்லைகள்

தொல்லைகள்

ஆனால், இந்த லாங்க் கோவிட், சம்பந்தப்பட்ட நபர்களின் இனம், வயது, பாலினம், சமூக பொருளாதார நிலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டது இல்லை, நீண்ட கால கோவிட் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்ற தொல்லைகள் தொடர்ந்து வருகின்றன.. 2020 ஏப்ரல் மாதம் தொடங்கி 2021 பிப்ரவரி மாதம் வரை, தொற்று பாதிப்புக்குள்ளானவர்களிடம் 90 நாட்களுக்கு பிறகு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இந்த ஆய்வு விரிவுப்படுத்தவும் உள்ளது.. இதனால், தொற்று பாதிப்பு ஆளானவர்களின் அடிப்படை சிக்கல்களை கண்டறிந்து தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

கடந்த மார்ச் மாதம் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நீண்ட கால தொற்றினால் பாதிக்கப்பட்ட 10ல் 7 பேருக்கு ஞாபக சக்தி திறன் குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.. அவர்களால் ஒரு விஷயத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை, அதனால் தொற்றில் இருந்து குணமானாலும், உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்" என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+