ஏன் இவ்வோ வரி? அமெரிக்காவையே புலம்ப வைத்த இந்தியா! சரக்கை வைத்தே சடுகுடு
நியூயார்க்: தங்கள் நாட்டு பொருட்களுக்கு இந்தியா அதிக வரியை விதிக்கிறது என்று அமெரிக்கா தொடர்ந்து புலம்பி வருகிறது. இன்று இந்த புலம்பல் ஒருபடி மேலே சென்றிருக்கிறது. அதாவது கூடுதல் வரி காரணமாக அமெரிக்க விஸ்கியை இந்தியாவில் விற்க முடியவில்லை என்று அந்நாட்டின் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெத்ரின் லீவிட்ட் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சரக்குக்கும் (விஸ்கி), வேளாண் சரக்குக்கும் இந்தியா அதிக வரியை விதிக்கிறது என்று புலம்பியிருக்கிறார்

அவர் பேசியதாவது, "எங்கள் நாட்டு பொருட்களுக்கு இந்தியா அதிக வரியை விதிக்கிறது. குறிப்பாக மதுபான வகைகளுக்கு 150% வரியையும், விவசாய பொருட்களுக்கு 100% வரியையும் விதிக்கிறது. சரக்குக்கு (விஸ்கி) அதிக வரியை போடுவதால் Kentucky Bourbon போன்ற விஸ்கியை இந்தியாவில் விற்கமுடியவில்லை. இந்தியா மட்டுமல்ல கனடாவும் இதைதான் செய்கிறது. அமெரிக்க சீஸ் மற்றும் பட்டர் மீது கனடா 300% வரியை போட்டிருக்கிறது.
இப்படி செய்வதன் மூலம் பல ஆண்டுகளாக அமெரிக்காவை கனடா ஏமாற்றி வருகிறது. எனவே நாங்கள் பதிலடியாக கனடாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினிய பொருட்களுக்கு 25% வரை வரியை விதித்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். இதில் கனடா பற்றி பேசியது நமக்கு முக்கியம் கிடையாது. ஆனால் இந்தியா பற்றி பேசியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
ஏனெனில், ஏப்-2ம் தேதி முதல் இந்தியா மீது வரியை விதிப்போம் என்று டிரம்ப் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு.. கெத்ரின் லீவிட்ட் கருத்து வலு சேர்ப்பதை போன்று இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்க பொருட்கள் மீதான வரி தொடர்கிறது. எந்த வரி குறைப்பும் நம் தரப்பிலிருந்து செய்யவில்லை என்று இந்திய வர்த்தக செயலாளர் சுனில் பாரத்வால் கூறியிருக்கிறார். இந்தியாவும்-அமெரிக்காவும் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 118.2 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. இது 20230ம் ஆண்டு 500 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் வரியை வைத்து ஒரு பொருளாதார போரை தொடங்கியிருக்கிறார். இந்த வரி விஷயத்தை எளிதாக புரிந்துக்கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாம் மாம்பழங்களை அனுப்புகிறோம். கிலோ 1 டாலருக்கு விற்பனையாகிறது. இப்போது டிரம்ப் இந்தியா மீது 100% வரியை விதிக்கிறார் எனில், மாம்பழத்தின் விலை 2 டாலராக உயரும். எனவே அமெரிக்க மக்கள், இந்திய மாம்பழங்களை தவிர்த்துவிட்டு சீன மாம்பழங்களை வாங்க தொடங்குவார்கள். இதனால் இந்தியாவுக்கு வர்த்தக பாதிப்பு.
நாம, அமெரிக்காவுக்கு வரியை போட்டால் அதனால் ஒன்னும் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால், நம் மீது அமெரிக்கா வரியை போட்டால் நமக்குதான் சிக்கல்.












Click it and Unblock the Notifications