"பிரபலத்தை" கொல்ல போறாங்க.. டிரம்ப்புக்கு காது கேக்காது.. எல்லாரும் அழிய போறாங்க.. கிளம்பியது பகீர்
நியூயார்க்: இன்னும் இந்த வருடமே முடியவில்லை.. அதுக்குள்ளேயே 2024-ம் ஆண்டுக்கான கணிப்புகள் வெடித்து கிளம்பிவிட்டன.. டிசம்பருக்குள்ளே என்னென்ன நடக்குமோ தெரியவில்லை என்று கலங்கி உள்ளனர் மக்கள்.
பாபா வாங்கே - இவர் பல்கேரியாவை சேர்ந்தவர்.. கண்பார்வையற்றவரும் கூட.. 85ம் வயதில் 1996-ம் வருடம் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை உலக மக்களால் மதிக்கப்படுகிறார்.

காரணம், 12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்..
கருப்பினத்தவர்: இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்தும் உள்ளது.. அவைகளில் பல ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்தும் வருகின்றன. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார், 2016-ல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் என்ற பல விஷயங்களை பல வருடங்களுக்கு முன்பே கணித்து சொன்னார்
அதுமட்டுமல்ல, ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும், குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார், உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றும் அறுதியிட்டு சொல்லி உள்ளார்..
இவர் கணித்து விட்டு போன அத்தனையும் நடந்துள்ளது.. அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் என்பது முதல், இந்த 2022ல் ஆஸ்திரேலியாவில், சீனாவின் தென் மாகாணங்களில் வெள்ளம் ஏற்படும் என்று கணித்து கூறியது வரை எல்லாமே பலித்துவிட்டது.. அதனால், ஒவ்வொரு வருட துவக்கத்தின்போதும், பாபா வாங்கா சொல்லிய கணிப்புகள் மிகுந்த கவனத்துடன் உலக மக்களால் கவனிக்கப்படும். சார்லஸ்: சில மாதங்களுக்கு முன்புகூட இவர் கூறிய சில கணிப்புகள் இணையத்தில் வெளியாகியிருந்தன.. "இன்னும் 24 ஆண்டுகள் வரை சார்லஸ் உயிருடன் இருந்தால், அவரது ஆட்சியே எல்லா காலத்துக்கும் தொடரும் .. 2046-க்கு பிறகு மனிதனின் ஆயுட்காலம் 100 வயது இருக்கும்.. 100 வயது வரை மனிதர்கள் இயல்பாக வாழுவார்கள். அறிவியல்களின் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைகளால் சாத்தியமாகும். வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இன்னும் இந்த வருடம் முடிய 5 மாதங்களே உள்ள நிலையில், மறுபடியும் பாபா வாங்கா குறித்து வைத்திருக்கும் கணிப்புகள் வட்டமடிக்க துவங்கிவிட்டன.
தீ வெள்ளம்: அதன்படி, "2024 க்கான தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ, வெள்ளம் போன்ற பேரழிவுகள் வரப்போகிறது.. புற்றுநோய்க்கான தீர்வு 2024ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும்.. ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள்.
2024ல் இந்த உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும். குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் முன்னேற்றங்கள் ஏற்படும்.. 2024ல் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்" என்று கணித்திருக்கிறாராம்.
அதிர்ச்சி: இதைத்தவிர இவரது மேலும் 2 கணிப்புகள் உலக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.. "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2024ம் ஆண்டில் தன்னுடைய சொந்த நாட்டை சேர்ந்த ஒருவராலேயே படுகொலை செய்யப்படுவார்" என்று பாபா வங்கா கணித்துள்ளார்..
அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், 2024ம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார்.. அது அவரை காது கேளாதவர் ஆக்கும்.. மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கணித்து வைத்துள்ளாராம். இதையெல்லாம் கேட்டு உலக மக்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்..
அழிவு நிச்சயம்: "உலகம் பூராவும் கொரோனா நோய் தொற்று, நோய், அழிவு நிச்சயம்" என்று அன்றே உறுதியாக சொன்னவர்தான் இந்த பாபா வாங்கா.. அதிலும், "கொரோனா" என்று நாம் யாருமே அறிந்திராத ஒரு பெயரை, அன்றே குறிப்பிட்டு கணித்து வைத்திருந்தது மிகப்பெரிய ஆச்சரியம். அதுவும் இல்லாமல், இவர் சொன்னதெல்லாம் 85 சதவீதம் பலித்துவிட்ட நிலையில், புதுவருடம் பிறக்க இன்னும் 5 மாதமே உள்ள நிலையில், இவர் சொல்லும் 2024- சமாச்சாரங்களை நினைத்தாலே இப்பவே நமக்கு கதி கலங்குது..!!












Click it and Unblock the Notifications