அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி
வாஷிங்டன்: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஈரான் - அமெரிக்கா மோதலுக்குப் பின்னால் ஒரு தனிநபர் நிழலாக இருந்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்றால், அது ஜாரெட் குஷ்னர் தான். டொனால்ட் டிரம்பின் மூத்த மகள் இவான்காவின் கணவர் என்பதைத் தாண்டி, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் "அதிரடி மூளையாக" இவர் பார்க்கப்படுகிறார். இந்த மாப்பிள்ளை சார் தான் பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்..
ஜெர்மனியின் ஹிட்லரால் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட யூத வம்சத்தில் இருந்து தப்பி உயிர்பிழைத்த குடும்பத்தில் பிறந்த சார்லஸ் குஷ்னர் என்ற மிகச்சிறந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் தான் இந்த "ஜேரட் குஷ்னர்" என்ற யூத வம்சத்தைச் சேர்ந்த புத்திசாலி.. இவரை உயிருக்கு உயிராக காதலித்தவர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் "இவான்கா", முதலி்ல் மறுத்தாலும், யூத மதத்திற்கு மாறினால் திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டார் ஜேரட். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக யூதமதத்தின் எல்லாக் கடுமையான நெறிமுறைகளையும் கற்றுக் கொண்டு, ஜேரட்டைக் கரம்பிடித்தார் இவான்கா.

இந்த ஜேரட் , அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மருமகனான பிறகு,, உலகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களை களை எடுக்கத் துவங்கினார். முக்கியமாக இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுகின்ற,,,ஹமாஸ், ஜெய்ஷ் இ தொய்பா, ஐ எஸ் ஐ எஸ், ஹூர்தி இனக்குழு, தாலிபான், இன்னும் பல குழுக்களை அழிக்கும் வேலையில் இறங்கினார். இன்று ஈரானுக்கும் , இஸ்ரேலுக்கும் நடக்கின்ற போரின் சூத்திரதாரியே ஜேரட் தான் என்றால் நம்பமுடிகிறதா, ஆனால் அதுதான் உண்மை..
இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
யார் இந்த ஜாரெட் குஷ்னர்?
நியூயார்க்கின் பெரும் கோடீஸ்வரரான ஜாரெட் குஷ்னர், ஒரு ஆர்த்தடாக்ஸ் யூதர் . 2009-ல் டிரம்பின் மகள் இவான்காவைத் திருமணம் செய்துகொண்டார். டிரம்ப் முதன்முறை அதிபரான போதே, எவ்வித அரசியல் அனுபவமும் இன்றி வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகரானார். இன்று 2026-ல், ஈரான் மீதான ராணுவத் தாக்குதலுக்குப் பின்னால் இவருடைய ஆலோசனைகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
போருக்கு காரணமான 'ஆபிரகாம் உடன்படிக்கை'
குஷ்னர் செய்த மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை "ஆபிரகாம் உடன்படிக்கை". இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே உறவை ஏற்படுத்தியதன் மூலம், ஈரானை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனிமைப்படுத்திவிட்டார். "ஈரானின் பலமான ஹெஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களை ஒடுக்காமல் அமைதி வராது" என்பது குஷ்னரின் நீண்டகால நிலைப்பாடு ஆகும்.
ஈரான் போர் - குஷ்னரின் பங்கு என்ன
கடந்த சில வாரங்களாக ஜெனீவாவில் ஈரானுடன் நடந்த ரகசிய அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு டிரம்பின் நேரடித் தூதராக குஷ்னர் தான் சென்றார். ஆனால், "ஈரான் பேச்சுவார்த்தை மூலம் காலத்தை கடத்துகிறது, இனி போர்தான் தீர்வு" என டிரம்பிற்கு பச்சைக்கொடி காட்டியது இவர்தான் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - அமெரிக்க கூட்டணி
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் நெருங்கிய நண்பர் தான் குஷ்னர், இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களுக்காக ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தகர்க்கும் திட்டத்தை வடிவமைத்ததாக சொல்லப்படுகிறது. ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள தற்போதைய ஆட்சியை அகற்றிவிட்டு, புதிய இடைக்கால அரசை அமைப்பதற்கான ரகசியக் குழுவையும் குஷ்னர் ஒருங்கிணைத்து வருகிறாராம்.
விமர்சனங்கள்
குஷ்னர் தனது குடும்பத் தொழிலான ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து இந்தப் போரைத் தூண்டிவிடுவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.. "ஒரு தனிநபர் தனது குடும்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளைப் போருக்குள் தள்ளுகிறார்" என்பதே தற்போதைய சர்வதேச விமர்சனமாக உள்ளது.
இன்றைக்கு மக்கள் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் உலகம் தத்தளித்துக் கொண்டிருக்க, டிரம்பின் நம்பிக்கைக்குரிய மாப்பிள்ளை ஜாரெட் குஷ்னர் தான் முக்கியமான காரணம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்..












Click it and Unblock the Notifications