அமெரிக்க லேடி கட்டிய "பாலியல் கோட்டை".. விபச்சாரத்தில் ஆசிய பெண்களா? இரவில் உல்லாசம்.. கோர்ட் அதிரடி
நியூயார்க்: விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய, பெண் புரோக்கர் ஒருவர் கைதாகியிருக்கிறார்.. இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் வரை சென்றிருந்த நிலையில், இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இது மிகுந்த பரபரப்பையும் உண்டுபண்ணி வருகிறது.
கடந்த மாதம், கோவையில் பாலியல் புரோக்கர் 41 வயதுடைய சிக்கந்தர் பாஷா கைதாகியிருந்தார்.. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோதான், பல்வேறு பூதாகரமான செய்திகள் கசிந்திருந்தன.

ஆல் இந்தியா ஏஜென்ட் குரூப் என்ற வாட்ஸ்அப் குரூப்பை வைத்து, இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ரஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து, ஏஜென்ட்கள் மூலம் பெண்களை அழைத்து வந்து, கோவையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்திருப்பதும் தெரியவந்தது.
பெண்கள்: அதாவது, வெளிநாட்டிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பாலியல் புரோக்கர் சிக்கந்தர் போலவே, இங்கிருந்து பெண்களை, அமெரிக்காவுக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார் இன்னொரு பாலியல் புரோக்கர்.
இந்த புரோக்கர் ஒரு பெண் ஆவார்.. ஹான் லீ என்று பெயர்.. 42 வயதாகிறது.. அமெரிக்காவில் ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம், இந்தியா உட்பட ஆசிய பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.. பாஸ்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம், மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
பணத்தாசை: அவர்களை எந்நேரமும் மகிழ்விப்பதற்காகவே ஆசியாவிலிருந்து பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்துள்ளார்.. பிறகு, பல்வேறு இடங்களில் விபச்சாரத்திலும் அவர்களை ஈடுபடுத்தி, மிகப்பெரிய பாலியல் நெட்வொர்க்கை, ஹான் லீ உருவாக்கியிருக்கிறார்.. இதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்..
அதாவது, ராணுவ உயரதிகாரிகள், காரப்பரேட் புள்ளிகள், அரசியல்வாதிகளை, பெண்கள் மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே, ஏர்லைன் மற்றும் தங்குமிட வசதிகள் விசேஷமாக செய்து தரப்படுமாம்.. அப்போது, அந்த விவிஐபிகளிடம் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்று பிரத்யேகமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ள. ஒரு மணி நேரத்துக்கு $350 to $600 டாலர்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம்: கடந்த நவம்பர் மாதம் இந்த விஷயம் விஸ்வரூபமெடுத்ததையடுத்து, ஹான் லீயை போலீசார் கைது செய்தனர்.. இவரிடம் சிக்கியவர்கள் எல்லாருமே பெரும் புள்ளிகள் என்பதால், ஹான் லீ கைதானது, மிகப்பெரிய பரபரப்பை அங்கு ஏற்படுத்திவிட்டது.
இறுதியில் இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.. விசாரணையும் துவங்கி நடைபெற்று வந்தது.. அப்போது, தன் மீதான குற்றத்தை ஹான் லீ ஒப்புக்கொண்டுள்ளார்.. ஆனால் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி, இந்த தொழிலில் ஈடுபடுத்தவில்லை என்று கோர்ட்டில் தெரிவித்தார். விசாரணையின் முடிவில், இந்த வழக்கில், நேற்றைய தினம் பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது.
பரபரப்பு: அதில், ஹான் லீக்கு 25 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.. ஆனால், இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகள் என பலருக்கும் தொடர்பு இருந்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். 42 வயது பெண்ணுக்கு, 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications