நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வுகான் லேபிலிருந்து பரவவில்லை.. அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் WHO-வின் விளக்கம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் சீனாவில் விலங்குகளிடம் இருந்து பரவியிருக்கலாம் என்றும், ஆய்வகத்திலிருந்து தானாக உருவாக்கப்பட்டதல்ல என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    வியாழன் முதல் தடுப்பூசி போடுகிறோம்..தடுப்பூசி கண்டிபிடித்த இங்கிலாந்து

    இதுகுறித்து WHO செய்தித் தொடர்பாளர் ஃபடேலா சைஃப் கூறுகையில் கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து தோன்றியது என்றே பெரும்பாலான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த வைரஸ் வுகான் லேபிலிருந்து உருவாக்கப்பட்டதல்ல. வேண்டுமென்றே பரப்பப்பட்டதல்ல.

    எனவே அது விலங்குகளிடம் இருந்து பரவியதுதான். ஆனால் விலங்குகளிடமிருந்து எப்படி மனிதனுக்கு தோன்றியது எப்படி என்பது குறித்த எந்த தகவல்களும் தெரியவில்லை. அது வவ்வால்களிடமிருந்து பரவியிருக்கலாம்.

    இந்தியாவில் கொரோனா.. ஒரு குட் நியூஸ்.. ஒரு பேட் நியூஸ் இருக்கு இந்தியாவில் கொரோனா.. ஒரு குட் நியூஸ்.. ஒரு பேட் நியூஸ் இருக்கு

    உலக சுகாதார நிறுவனம்

    உலக சுகாதார நிறுவனம்

    எனினும் வவ்வால்களிடமிருந்து எப்படி மனிதனுக்கு பரவியது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதி அளிப்பதை டிரம்ப் நிறுத்திக் கொள்வதாக கூறியது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். எங்கள் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பேசி அந்த நிதியை வேறு வகையில் பெற முடியுமா என்பதை ஆராய்வோம்.

    போராட்டம்

    போராட்டம்

    நாங்கள் கோவிட் 19 க்காக மட்டும் போராடவில்லை. போலியோ, எச்ஐவி, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கும் தொடர்ந்து போராடி வருகிறோம். எனவே இதை தொடர்வது முக்கியமானது. எங்கள் அமைப்புக்கு அதிக நிதி தருவது அமெரிக்காதான். அதற்கு அடுத்தபடியாக கேட்ஸ் அறக்கட்டளை, பிரிட்டன் ஆகியவை உள்ளன என்றார்.

    சீனா

    சீனா

    உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதியை இனி நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் சீனாவுக்கு ஆதரவாக WHO செயல்படுகிறது என குற்றம்சாட்டியிருந்தார். மேலும் ஹூவுக்கு அமெரிக்காதான் அதிக நிதியை அளிக்கிறது. ஆனால் குறைந்த நிதியை அளிக்கும் சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவாக செயல்படுவது டிரம்பிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    டிரம்ப் கூறியது

    டிரம்ப் கூறியது

    அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்திலிருந்து வேண்டுமென்றே பரப்பப்பட்டது என கூறி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் கொரோனா விலங்குகளிடமிருந்து பரவியிருக்கலாம் என்றும் அது பரிசோதனை கூடத்திலிருந்து பரவியது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

    English summary
    World Health Organisation says Coronavirus very likely of animal origin. It has no sign of lab manipulation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X