அமெரிக்க இந்தியர்கள் தப்பி தவறி கூட இந்தியா திரும்ப வேண்டாம்! வல்லுனர்கள் வார்னிங்! யாருக்கு சிக்கல்
சென்னை: அமெரிக்காவில் சில வகையான கிரீன் கார்டு வைத்து உள்ள இந்தியர்கள் தப்பி தவறி கூட சொந்த நாட்டிற்கு திரும்பி போக கூடாது என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர். இந்தியர்கள் மட்டுமன்றி அமெரிக்காவில் சில வகையான கிரீன் கார்டு வைத்து உள்ள வெளிநாட்டினர் யாரும் சொந்த நாட்டிற்கு திரும்பி போக கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களை மீண்டும் மறு ஆய்விற்கு உட்படுத்துவது, அவர்களின் கிரீன் கார்டுகளை நீக்குவது, நாடு கடத்துவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்தியர்கள் பலர் இந்த ஆய்விற்கு உள்ளாகி வருகின்றனர்.
முக்கியமாக வயதான இந்தியர்கள் ஆய்விற்கு உட்படுகிறார்கள். சில இந்தியர்களை, நீங்கள் உங்களின் கிரீன் கார்டுகளை துறந்துவிடுங்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். இதற்காக US Custom and Border Protection (CBP) அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

வயதான இந்தியர்களை சோதனை செய்து உங்களுக்கு கிரீன் கார்டு இருக்க இனியும் தகுதி இல்லை என்று கூறி அவர்களை கிரீன் கார்டுகளை துறந்துவிடுங்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். உடனே உங்கள் கிரீன் கார்டுகளை சரண்டர் செய்யுங்கள் என்றும் பிரஷர் கொடுக்கப்படுகிறது.
கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் அப்படி சரண்டர் செய்ய வேண்டியது இல்லை. அவர்கள் வழக்கு தொடுக்கலாம். ஆனாலும் சரண்டர் செய்யும்படி அவர்களுக்கு பிரஷர் கொடுக்கப்படுகிறதாம். சமீபத்தில்தான் துணை அதிபர் வான்ஸ் கிரீன் கார்டு என்பது நிரந்தரமல்ல.. அதை நாங்கள் நினைத்தால் நீக்குவோம் என்றார்.
கிரீன் கார்டு எச்சரிக்கை
இந்த நிலையில்தான் அமெரிக்காவில் சில வகையான கிரீன் கார்டு வைத்து உள்ள இந்தியர்கள் தப்பி தவறி கூட சொந்த நாட்டிற்கு திரும்பி போக கூடாது என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர். இந்தியர்கள் மட்டுமன்றி அமெரிக்காவில் சில வகையான கிரீன் கார்டு வைத்து உள்ள வெளிநாட்டினர் யாரும் சொந்த நாட்டிற்கு திரும்பி போக கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நியூயார்க்கை சேர்ந்த குடிவரவு வல்லுனர் மற்றும் வழக்கறிஞரான பாஷு ஃபுலாரா, கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் இந்த நேரத்தில் சொந்த நாட்டிற்குள் செல்வது சிக்கல். முக்கியமாக வயதானவர்கள். ஏனென்றால் அவர்கள் திரும்பி வரும் போது சிக்கல் ஏற்படலாம். அதேபோல் ஒரு தனிநபர் தனது சொந்த நாட்டில் துன்புறுத்தல் காரணமாக அடைக்கலம் கேட்டு.. அடைக்கலத்திற்கான கிரீன் கார்டு பெற்று இருந்தால்.. அவர்களும் சொந்த நாட்டிற்கு செல்ல கூடாது.
இது போன்ற யாராவது தாமாக முன்வந்து அந்த நாட்டிற்குத் திரும்பும்போது, அவர்கள் மீண்டும் வரும் போது சிக்கல் ஏற்படலாம். சமயங்களில் அவர்களின் கிரீன் கார்டு கூட ரத்து செய்யப்படலாம் என்று எச்சரித்து உள்ளார்.
இந்தியர்களுக்கு சிக்கல்
ஏற்கனவே அமெரிக்காவில் கோல்டு கார்டு விசா கொண்டு வரப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த புதிய விதிப்படி, $5 மில்லியன் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும். அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் அங்கே இருப்பதோடு.. அதற்கு கிரீன் கார்டு லைனில் நிற்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற லைனில் நிற்க வேண்டியது இல்லை.
மாறாக உங்களுக்கு நிறைய சொத்து, பிஸ்னஸ் பின்னணி இருக்க வேண்டும். நீங்கள் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கட்ட வேண்டும்.
-
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications