ஈரான் இறங்கி அடிக்கும்னு நினைக்கல! இரவிலிருந்து பதறிய டிரம்ப்! போரை நிறுத்த தீவிரமாக முயல்வது ஏன்?
நியூயார்க்: இஸ்ரேல் உடன் போரை ஈரான் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறார். கடந்த வாரம் வரை.. ஈரானின் அணு திட்டங்களை நிறுத்தும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது என்று டிரம்ப் கூறி வந்தார்.
இப்போது அதே டிரம்ப் போரை நிறுத்த வேண்டும்.. போரை நிறுத்திவிட்டோம் என்றும் கூறி வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலும் ஈரானும் ஒரே நேரத்தில் தன்னிடம் சமாதானம் பேசியதாகவும், போரை நிறுத்த இதுவே சரியான தருணம் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் உலகமும், மத்திய கிழக்கும் பயனடைவதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளும் எதிர்காலத்தில் அன்பு, அமைதி மற்றும் செழிப்புடன் திகழ்வார்கள் என நம்புகிறேன் என்றும் கூறினார்.
ஆனால் டிரம்ப் சொல்வது பொய்.. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் கூறி உள்ளது. அதோடு ஈரான் இஸ்ரேல் மீது இன்று காலை முதல் மீண்டும் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
டிரம்ப் அச்சம்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

டிரம்பின் ட்ரூத் சோஷியல் தளத்தில், "எண்ணெய் விலையை குறையுங்கள், நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! எதிரியின் கையில் சிக்கி விடாதீர்கள், மாட்டிக்கொள்ளாதீர்கள்," என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் அமெரிக்கா கூடுதலாக கச்சா எண்ணெயை ட்ரில் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
ஒரு பக்கம் எண்ணெய் விலை உயர்வு பற்றி டிரம்ப் அச்சம்.. இன்னொரு பக்கம் போரை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் காட்டும் அச்சம் இரண்டிற்கும் முக்கியமான காரணங்கள் உள்ளன.
டிரம்ப் அச்சத்திற்கு என்ன காரணம்?
கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்கத் தயக்கம் காட்டி வருகின்றன. சில கப்பல்கள் ஏற்கனவே அப்பகுதியில் செல்லாமல் திசைமாறிச் சென்றுள்ளன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா தலையிட்டால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அமெரிக்கா நடத்திய தாக்குதலால் விரைவில் ஈரான் இந்த ஜலசந்தியை மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி என்பது மத்திய கிழக்கு வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய நீர்வழி. இதன் குறுகலான இடத்தில் ஜலசந்தி சுமார் 21 மைல்கள் அகலம் கொண்டது. மேலும் இரண்டு திசைகளிலும் இரண்டு மைல்கள் அகலமுள்ள இரண்டு கப்பல் பாதைகள் உள்ளன. இது உலகின் மிக முக்கியமான ஜலசந்தியாகக் கருதப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீதத்தை இந்த ஜலசந்தி கையாளுகிறது. இது உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றாகும். இந்த ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் உலக எண்ணெய் சந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாதை தடுக்கப்பட்டால் உலகின் பொருளாதாரம் சில வாரங்களில் பாதாளத்திற்குச் செல்லும் அபாயம் உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூட முடியும் என்று ஈரான் நீண்ட காலமாக கூறி வருகிறது. இந்த ஜலசந்தியை ஒரு சாலையை மூடுவது போல் எளிதாக மூட முடியாது. ஆனால் வணிகப் போக்குவரத்துக்கு ஆபத்தானதாக மாற்றி, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க ஈரான் முயற்சி செய்யலாம். இரண்டு ஏவுகணைகளை ஏவினால் போதும், போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். ஈரான் இதை மூட முயன்று வருவதால் டிரம்ப் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போய் உள்ளார்.
இரண்டாவதாக ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுத்து உள்ளது. நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
6 ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் கத்தாரில் தாக்குதல் நடத்தியது. ஈரான் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு தூதரக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த பின்பே.. ஈரான் இந்த அட்டாக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டிரம்ப் இதையும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அவர் கிட்டத்தட்ட அதிர்ச்சியில் உறைந்து.. தற்போது போரை நிறுத்துங்கள் என்று இறங்கி வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications