செம சுருட்டை! சால்ட் அண்ட் பெப்பர்! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் தலைமுடியை பறக்கவிடுவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் தலை முடியை கட்டாமல் பறக்கவிட்டுக் கொண்டே இருந்தது ஏன் தெரியுமா? நாசா வீடியோவில் பார்க்கும் போது அவரது தலை முடி சுற்றி பறந்துக் கொண்டே இருக்கும்.

நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 9 நாட்கள் பயணமாக வில்மோருடன் சுனிதா வில்லியம்ஸ், ஸ்டார்லைனரின் போயிங் விண்கலத்தில் சென்றிருந்தார்.

Sunitha Williams NASA

அவர்கள் திரும்பி வரும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக போன விண்கலத்தில் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளியிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்தது.

இந்நிலையில் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் அங்கு மனிதர்களால் நடக்க முடியாது. அவர்கள் பறந்தபடியே இருப்பார்கள். அவர்கள் படுத்து உறங்குவதற்குக் கூட சிறிய பெட்டி போன்று ஒரு இடம் இருக்கும். அதில்தான் அவர்கள் ஓய்வெடுக்க முடியும்.

தங்களுக்கான உணவுகளை அவர்கள் கேப்சூல் வடிவில் கொண்டு செல்வார்கள். அதை பல மாதங்கள் வைத்திருப்பார்கள். மீண்டும் விண்கலம் வந்தால் அவர்களுக்கான உணவு பொருட்களும் சேர்ந்தே செல்லும். வீட்டில் உள்ள உறவினர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் விண்வெளியில் இருந்து பேசிக் கொள்ளும் வசதி உள்ளது.

இது எல்லாவற்றையும் விட அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு, உயர்வான ஊதியம் என நிறைய சலுகைகள் இருந்தாலும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், உயிரை பணயம் வைத்துதான் விண்வெளிக்கு சென்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் இவர்கள் பூமிக்கு திரும்பும் போது ஏராளமான உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் தலைமுடியை கட்டிக் கொள்வதே இல்லையே ஏன் தெரியுமா?

சுனிதா வில்லியம்ஸின் வீடியோவில் கூட அவரை பார்க்கும் போது அவரது தலையை சுற்றி முடி பறந்தபடியே இருக்கும். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சுருண்டு பறக்கும்! அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட சுனிதாவை காட்டு முடி கொண்ட பெண் என கிண்டலாக சொல்லியிருந்தாலும் அவரை பாராட்டியபடியே அவர் பேசியிருந்தார்.

விண்வெளியில் முடியை பெண்கள் கட்டாமல் விரித்து வைத்திருப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். பூமியை போல் விண்வெளியில் இயற்கையாக முடி கொட்டாது. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் முடியை கீழ் நோக்கி இழுக்க முடியாது. அதனால் பெண்கள் முடியை ரப்பர் பேண்ட் கொண்டு கட்டாமல் வைத்திருக்கிறார்கள்.

விண்வெளி வீராங்கனைகள் அலச தேவையில்லாத ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள் (பொதுவாக ஷாம்பு போட்டால் நுரைக்கும், அதற்காக தலைமுடியை தண்ணீரால் அலச வேண்டும். ஆனால் விண்வெளியில் நுரைக்காத அலச தேவையில்லாத ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள்.) அதனால் அவர்களது முடி இயற்கையாக நன்றாக இருக்கும்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் காற்றோட்டம் இருப்பதால் தலையில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்குகிறது. இதனால் முடியை காய வைக்க டிரையர்கள் தேவையில்லை.

முடி முகத்தில் படும், சங்கடமாக இருக்கும் என்பதால்தான் முடியை பின்னுவதோ, ரப்பர் பேண்ட், கிளிப் போட்டு கட்டுகிறோம். பெரும்பாலான விண்வெளி வீராங்கனைகள் தலைமுடியை விரித்து விடவே விரும்புகிறார்கள். ஏனென்றால் பூமியை போல் அந்த முடி முகத்தில் படுவதும் இல்லை, பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+