13 வயது சிறுவனை.. அமெரிக்காவின் சீக்ரெட் ஏஜென்டாக நியமித்த டிரம்ப்! பின்னால் இப்படியொரு காரணமா!
நியூயார்க்: அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்டாக 13 வயது சிறுவனை டிரம்ப் நியமித்திருந்தார். இது தொடர்பான அறிவிப்புக்கு அமெரிக்க மக்கள் பலரும் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
சிறுவன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 5 மாதங்கள் மட்டுமே சிறுவனால் உயிர் பிழைக்க முடியும் என்பதாலும் அவனுடைய ஆசையை தான் நிறைவேற்றியிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில உரையாற்றிய டிரம்ப், இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார். மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனின் ஆசையாக இது இருந்தது என்றும், ஆசையை நிறைவேற்றும் விதமாக ஒரு நாள் சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்டாக சிறுவனை நியமித்திருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அவரின் இந்த நியமனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.
புற்றுநோய்கள் பல வகையாக இருந்தாலும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தீராத தலைவலி, வாந்தி, மயக்கம், பார்வை பாதிப்பு, இரட்டை படங்கள் (Double Vision), Sensitivity to light, கை, கால் அல்லது முகத்தில் விறைப்புத்தன்மை, நடக்கும் போது தடுமாறுதல், கைகளால் பொருட்களை பிடிக்க முடியாமல் தடுமாறுதல் போன்றவை இந்த புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளாகும்.
நோயை முதலில் கண்டறிந்துவிட்டாலும், கூட இதற்கான சிகிச்சை சிலருக்கு மட்டுமே பலனளிக்கும் இருக்கும். சிகிச்சை பலனளிக்கவில்லை எனில், மூச்சு தினறல் ஏற்பட்டு அது உயிரிழப்பை ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் கடந்த 2023ம் ஆண்டு மட்டும் சுமார் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 1 கோடி பேர் உயிரிழந்துவிட்டனர். 2024-2030 காலக்கட்டத்தில், உலகளவில் புற்றுநோயின் தாக்கம் 40% அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய் (Breast Cancer)
நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)
குடல்குற்றி புற்றுநோய் (Colorectal Cancer)
மூளை மற்றும் நரம்பியல் புற்றுநோய் (Brain & Nervous System Cancer)
கிட்னி, கருப்பை, மற்றும் கல்லீரல் புற்றுநோய்
என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை தவிர வேறு சில புற்றுநோய்களும் இருக்கின்றன. இதில் சோகமான விஷயம் என்னவெனில், நாம் வாழும் ஆசிய கண்டத்தில்தான் உலகளவில் மிகுந்த புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. அதாவது உலகில் 100 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் எனில் அதில் 60 பேர் ஆசியாவை சேர்ந்தவர்களாவார்கள்.
உலகில் ஒவ்வொரு 6 மரணங்களில் 1 மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது. தரமான உணவு மற்றும் உடல்பயிற்சி, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தலை தவிர்ப்பது ஆகியவை புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து நம்மை காப்பாற்ற உதவும்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications