அமெரிக்காவில் பூகம்பம் வெடிக்கும்.. அரசியல் நாசமாகும்.. ஸ்டன் ஆகி நிற்கும் பிரபல தலைகள்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீனின் பலான லிஸ்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மஸ்க் - டிரம்ப் இடையிலான மோதலால் டிரம்ப் மீது மஸ்க் இந்த புகாரை வைத்து உள்ளார். இந்த புகார் உண்மையாகும் பட்சத்தில் அது அமெரிக்காவில் பெரிய புயலை கிளப்பும்.

அது மட்டுமல்ல மஸ்க்கிடம் நிறைய சிஐஏ ரகசியங்கள் உள்ளன. எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக சிஐஏ அமைப்புடன் நெருக்கமாக மாறி வருகிறார். கிட்டத்தட்ட சிஐஏ அமைப்பின் செல்லப்பிள்ளையாக அவர் மாறிவிட்டார். அமெரிக்காவில் யார் அதிபராக இருந்தாலும் சிஐஏதான் ஆட்சி செய்கிறது என்ற வாதம் உள்ளது.

சிஐஏ கட்டுப்பாட்டில்தான் deepstate உள்ளது. அவர்கள்தான் உலக அரசியலை கட்டுப்படுத்துகிறார்கள் என்ற வாதம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் எலான் மஸ்க் சிஐஏவிற்கு நெருக்கம் ஆகி உள்ளார்.

சமீபத்தில் கூட அமெரிக்கர் ராணுவ ரகசியங்கள் பல பென்டகன் மூலம் எலான் மஸ்க்கிற்கு தெரிவிக்கப்பட்டதாக சிஐஏ வட்டாரங்கள் தெரிவித்தது. இந்த நிலையில் எலான் மஸ்க் மீண்டும் சிஐஏ அலுவலகத்திற்கு விசிட் செய்துள்ளார். அங்கே அவர் நீண்ட நேரம் ஆலோசனைகளை செய்தார். அரசின் தற்காலிக பதவியில் இருந்தது ஒருவர் அமெரிக்காவின் உயரிய சிஐஏ அமைப்பில் என்ன ஆலோசனைகளை செய்கிறார் என்ற பரபரப்பு உலக அளவில் ஏற்பட்டது. அவர் உலகின் நம்பர் 1 பணக்காரர், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல.. அதோடு மூர்க்கமாக முடிவுகளை எடுக்க கூடியவர். அப்படிப்பட்டவர் சிஐஏ அலுவலகத்தில் என்ன செய்கிறார் என்ற கேள்வி.. விவாதம் எழுந்தது.

Why will the fight between Donald Trump and Elon Musk make USA politics worse

இப்படிப்பட்ட மஸ்க்கிடம் ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீனின் லிஸ்ட் பற்றிய ரகசியங்கள் இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இது வெளியே வரும் பட்சத்தில் அமெரிக்காவில் அரசியல் பூகம்பே வெடிக்கும்.

ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் அமெரிக்காவை சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார். அந்த நாட்டு நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் . எப்ஸ்டீன்விர்ஜின் தீவில் தனக்கு என்று தனியாக ஒரு தீவு வாங்கி.. அங்கே பெரிய மாளிகை கட்டி.. அதில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் பல பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவர்களுக்கு "சேவைகளை" வழங்கி உள்ளார். முக்கியமாக சிறுமிகளை சப்ளை செய்துள்ளார்.

யார் இவர்?

இதற்காக அவர் ஒரு "கல்ட்" குழுவை உருவாக்கியதோடு.. கிளப் போல இதை நடத்தி அடிக்கடி அங்கே பிரபலங்களை வரவழைத்து சிறுமிகளை சித்திரவதை செய்துள்ளார்.

இதை பல ஆண்டுகளாக இவர் எந்த பிரச்சனையும் இன்றி செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் 2005 ஆம் ஆண்டில், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள போலீசார், எப்ஸ்டீனை கைது செய்தனர் . தனது 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர் தெரிவித்த புகார் ஒன்றை அடுத்து, அவரை விசாரிக்கத் தொடங்கினர்.

எப்ஸ்டீன் லிஸ்ட்

எப்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 14 வயதுக்குட்பட்ட முப்பத்தாறு சிறுமிகளை ஃபெடரல் அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் கோர்ட் விசாரணையின் போது எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் 2008 ஆம் ஆண்டில் புளோரிடா மாநில நீதிமன்றத்தால் இவர் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் இரண்டு குற்றங்களுக்காக மட்டுமே அவர் தண்டிக்கப்பட்டார். கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் காவலில் இருந்தார். அதன்பின் விடுதலையும் ஆனார்.

அதன்பின் புளோரிடா மற்றும் நியூயார்க்கில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக எப்ஸ்டீன் மீண்டும் ஜூலை 6, 2019 அன்று கைது செய்யப்பட்டார். அவர் ஆகஸ்ட் 10, 2019 அன்று அவரது சிறை அறையிலேயே மர்மமாக இறந்தார். அவரது மரணத்திற்கு காரணம் தூக்குப்போட்டு தற்கொலை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் எப்ஸ்டீனின் வழக்கறிஞர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்.. மரணத்திற்கான உண்மையான காரணம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

என்ன நடந்தது?

இவரின் இருந்த "கஸ்டமர்கள்" லிஸ்ட்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன் இரண்டாவது லிஸ்ட் தற்போது நியூயார்க் கோர்ட்டில் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த "பலான லிஸ்டில்" சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளிண்டன், பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹாலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டிகாப்ரியோ, மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

கிரேட் பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ
பில் கிளிண்டன், முன்னாள் அமெரிக்க அதிபர்
ஹிலாரி கிளிண்டன், பில் கிளிண்டனின் முன்னாள் முதல் பெண்மணி
டேவிட் காப்பர்ஃபீல்ட், அமெரிக்க பிரபலம்
ஆலன் டெர்ஷோவிட்ஸ், வழக்கறிஞர்
டைட்டானிக் படத்தில் நடித்து பிரபலமானவர் லியோனார்டோ டிகாப்ரியோ
அல் கோர், முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி
ஸ்டீபன் ஹாக்கிங், புகழ்பெற்ற தத்துவார்த்த இயற்பியலாளர்
எஹுட் பராக், முன்னாள் இஸ்ரேலிய பிரதமர்
"கிங் ஆஃப் பாப்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன்.
மார்வின் மிங்க்சி, செயற்கை நுண்ணறிவு முன்னோடி
கெவின் ஸ்பேசி, அமெரிக்க நடிகர்
ஜார்ஜ் லூகாஸ், அமெரிக்க திரைப்பட இயக்குனர்
கேட் பிளான்செட், ஆஸ்திரேலிய நடிகர்
நவோமி காம்ப்பெல், பிரிட்டிஷ் மாடல்
ஷரோன் சர்ச்சர், பிரிட்டிஷ் பத்திரிகையாளர்
புரூஸ் வில்லிஸ், ஓய்வுபெற்ற அமெரிக்க நடிகர்
பில் ரிச்சர்ட்சன், நியூ மெக்சிகோவின் முன்னாள் கவர்னர்
கேமரூன் டயஸ், அமெரிக்க நடிகை
க்ளென் டுபின், அமெரிக்க முதலீட்டாளர்
நோம் சாம்ஸ்கி, மொழியியலாளர் மற்றும் அரசியல் தத்துவவாதி
டாம் பிரிட்ஸ்கர், அமெரிக்க அதிபர்
கிறிஸ் டக்கர், அமெரிக்க நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர்
சாரா பெர்குசன், யார்க்கின் டச்சஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி
ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், அமெரிக்க அரசியல்வாதி

உள்ளிட்ட பலர் இந்த லிஸ்டில் சிக்கி உள்ளனர். பிளாக்மெயில் செய்ய வேண்டும், எதிர்காலத்தில் உதவும் போன்ற குற்ற நோக்கங்களுக்காக இந்த பிரபலங்கள் மேற்கொள்ளும் பாலியல் செயல்பாடுகளை பதிவு செய்ய எப்ஸ்டீன் தனது தீவு முழுக்க பல இடங்களில் மறைக்கப்பட்ட கேமராக்களை பயன்படுத்தி வந்துள்ளார். .இந்த வீடியோ ரெக்கார்டர்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+