ஆ சிலுக்குதே.. டைட்டானிக் கப்பலுக்கும் நீர்மூழ்கி பைலட்டுக்கும் இப்படி ஒரு தொடர்பா? காவு வாங்குதே
நியூயார்க்: காணாமல் போன டைட்டன் நீர் மூழ்கி கப்பலின் பைலட்டுக்கும்.. ஏற்கனவே கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
டைட்டானிக் கப்பலை பார்க்க போய் கனடா கடல் பகுதியில் நீரில் மூழ்கிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து பேரில், இதுவரை நான்கு பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் - ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் உள்ளனர்.

இந்த கப்பலை மீட்க இன்னும் 10 மணி நேரம் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்கு பின் கப்பலுக்கு உள்ளே ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் உள்ளே சிக்கி இருக்கும் உயிர்களை மீட்க போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த மீட்பு பணியில் அமெரிக்கா ராணுவம், கடற்படை, விமானப்படை, கனடாவின் கடற்படை எல்லாம் மொத்தமாக களமிறங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.

ஸ்டாக்டன் ரஷ் என்பவர்தான் இந்த நீர்மூழ்கி கப்பலை ஓட்டிய பைலட் ஸ்டாக்டன் ரஷ். இவர் the OceanGate நிறுவனத்தின் சிஇஓவாகவும் இருக்கிறார். இவருக்கும் டைட்டானிக் கப்பலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
அதன்படி 1912ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இவரின் மனைவியின் தாத்தா, பாட்டி பயணம் செய்து மரித்து உள்ளனர். வென்டி ரஷ் இசடோர் ஸ்ட்ராஸின் கொள்ளுப் பேத்தி ஆவார். இசடோர் ஸ்ட்ராஸின் இந்த டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து மரித்தவர். இந்த நிலையில் அவரின் மருமகன் இப்போது டைட்டானிக்கை பார்க்க போய் கடலில் மூழ்கி காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டைட்டானிக் கப்பல்தான் இப்படி காவு வாங்குகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது.
இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து.

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளேது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது. இதை பார்க்க போய்தான் டைட்டன் கப்பல் காணாமல் போய் உள்ளது.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications