அமெரிக்க சரிவின் ஆரம்பம்.. Recession வருது.. டிரம்ப் முடிவால்.. உலக அளவில் வரும் பொருளாதார மந்த நிலை
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. பரஸ்பர வரிவிதிப்பால், 2வது நாளாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு அடைந்து உள்ளது. DOW JONES பங்குச்சந்தையில் 2000 புள்ளிகள் சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் டிரம்ப் முடிவுகளால் அந்நாட்டு பங்கு சந்தை 10 ட்ரில்லியன் டாலரை இழந்துள்ளது. ஒரே நாளில்.. ரூ.176 லட்சம் கோடி அமெரிக்க வர்த்தகத்தில் நேற்று சரிந்து உள்ளது. டிரம்ப் விதித்த வரி காரணமாக ஆட்டோமொபைல் துறை தொடங்கி ஐடி துறை வரை எல்லாம் மொத்தமாக வீழ்ந்து உள்ளது.

அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள வரிகள் காரணமாக உலக அளவில் மார்க்கெட்டுகள் சரிய தொடங்கி உள்ளன. நேற்று இரவே இந்திய நேரப்படி 11 மணி அளவில் அமெரிக்காவின் பிரபல S&P 500 ஃப்யூச்சர்ஸ் கடுமையான சரிவை சந்தித்தது. இதனால் சந்தை மூலதனத்தில் $2 டிரில்லியன் அழிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த விரைவான சரிவு கிரிப்டோகரன்சி சந்தையில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தியது, Bitcoin (BTC) $68,000 இலிருந்து $64,500 ஆக குறைந்தது. தோராயமாக 5.15% குறைந்துள்ளது Ethereum (ETH) ஆனது $3,200 இலிருந்து $3,040 ஆகவும், 5% வீழ்ச்சியைக் கண்டது.
அழியும் உலக பொருளாதாரம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. ஜே.பி. மோர்கன் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மந்தநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக மாறியுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி கட்டணங்கள் காரணமாக அமெரிக்கா பெரிய இழப்புகளை சந்திக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்கா மற்றும் உலக மார்க்கெட் சரிவு குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். உலக மார்க்கெட் தினம் தினம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள தகவல் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் டாப் நிறுவனங்கள் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள். இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை விழுந்தால் அதை தொடர்ந்து இந்திய, இங்கிலாந்து போன்ற பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
கணிப்பு
சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.
இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார்.
பதிலடி வரிகள் என்றால் என்ன?
முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும். வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.
81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
டிரம்ப் சரிவு
மார்க்கெட் சரிவது பெரிய விஷயம் அல்ல. மார்க்கெட் இனி உயரும். எதிர்பார்க்காத மிகப்பெரிய உயரத்தை மார்க்கெட் அடைய போகிறது. மார்க்கெட் சர்ரென புதிய உச்சத்தை அடையும் என்று டிரம்ப் கூறி உள்ளார். ஆனால் அவர் கூற்றிற்கு எதிர்மாறாக மார்க்கெட் சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications