ஏலியன்! அமெரிக்கா கையில் சிக்கிய யுஎப்ஓ.. ரகசியமா ஆராய்ச்சி பண்றாங்க! அரசு விசாரணையில் வெளியான உண்மை
நியூயார்க்: உலகை யுஎப்ஓ வாகனங்கள் விசிட் அடித்தது உண்மைதான், இதை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று முன்னாள் அமெரிக்க விமானப்படை உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் டேவிட் க்ரூஷ் என்பவர் அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஏலியன்களின் வாகனம் என்று அழைக்கப்படும் யுஎப்ஓ வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. நேற்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த விசாரணையில் யுஎப்ஓ தொடர்பான அரசின் சாட்சியங்கள் 3 பேர் விசாரணை செய்யப்பட உள்ளனர். இதனால் யுஎப்ஓ குறித்த உண்மைகள், ரகசியம் வெளியே வரப்போகிறது. தேசிய பாதுகாப்பு, எல்லை மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஹவுஸின் துணைக்குழு இந்த விசாரணையை நடத்துகிறது.
மேலும் இயற்பியல் விதிகளை மற்றும் நாம் இதுவரை படித்த விமான திறன்களை மீறும் விமானங்கள் பற்றி இதில் ஆய்வு செய்ய உள்ளனர். மனிதர் அல்லாத நுண்ணறிவு உயிரினங்கள் உள்ளனவா? அவை மூலம் இந்த விமானங்கள் இயக்கப்படுகிறதா என்று இந்த விசாரணை நடத்தப்பட உள்ளன.
அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை சமூகத்தின் முன்னாள் பணியாளர்களின் சாட்சியங்களும் இந்த விசாரணையின் போது விசாரிக்கப்பட உள்ளன. ஓபன் கோர்டில் நடப்பதால் இந்த விசாரணை தொலைக்காட்சிகளில் லைவ்வாக ஒளிபரப்பப்படும்.
நேற்று விசாரணை: இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையில் உலகை யுஎப்ஓ வாகனங்கள் விசிட் அடித்தது உண்மைதான், இதை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று முன்னாள் அமெரிக்க விமானப்படை உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் டேவிட் க்ரூஷ் என்பவர் அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் யுஎப்ஓ பற்றி ஆய்வு செய்ய தனியாக குழு இருப்பதாகவும். இந்த குழுக்கள் யுஎப்ஓக்களை ரகசியமான அரசின் டாப் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்து கைப்பற்றி வருகிறது. உலகம் எங்கும் தரையிறங்கும் யுஎப்ஓக்களை இவர்கள் மீட்டு வருகின்றனர்.
அதில் ரிவர்ஸ் எஞ்சினியரிங் மூலம் ஆராய்ச்சி செய்து அதை மீண்டும் உருவாக்க முயன்று வருகின்றனர். பூமிக்கு வெளியே இருக்கும் உயிரினங்கள், அவர்களின் வாகனங்கள் குறித்து 1930ல் இருந்தே அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. அப்போதில் இருந்தே அமெரிக்காவிற்கு இது தொடர்பான முக்கிய விவரங்கள், பொருட்கள் கிடைத்தன, என்று கூறியுள்ளார்.
யுஎப்ஓ: கடந்த 2020ம் வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2020ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்று முதல்முறை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது.
இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் அவை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், பென்டகன் இதை பற்றி விசாரிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் டாஸ்க் போர்ஸ் குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications