உப்பு சப்பில்லாத காரணம்.. குறி வைக்கப்படும் இந்திய வம்சாவளி.. நியூயார்க் மேயர் தேர்தலில் சிக்கல்!
நியூயார்க்: வரும் நவம்பர் மாதம் நியூயார்க் நரகத்திற்கான மேயர் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பாளர் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றிருக்கிறார். இவரே அடுத்த மேயராக வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்நிலையில் உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக அவர் தற்போது குறி வைக்கப்பட்டிருக்கிறார்.
அதாவது மம்தானி, கடந்த 2009 காலகட்டத்தில் கொலம்பியா பல்கலையில் படித்தார். இங்கு இடஒதுக்கீடு இருக்கிறது. கறுப்பின மக்களுக்கும், ஆப்பிரிக்க மக்களுக்கம் இடஒதுக்கீடு உள்ளது. மம்தானி, தனது விண்ணப்பத்தில் ஆசிய மற்றும் கறுப்பின அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர் என இரண்டு அடையாளங்களையும் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரி இதில் என்ன பிரச்சனை என்று தோன்றலாம். இதற்கு ஓர் உதாரணத்தை பார்ப்போம். இந்தியாவில் உள்ள உயர் சாதியினர் அமெரிக்காவுக்கு போகும்போது அவர்கள், அமெரிக்கர்களுக்கு இணையாக தங்களை சொல்லிக்கொள்கின்றனர். ஆனால், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட வியஷங்களில் விளிம்புநிலை மக்கள் என்று குறிப்பிடுகின்றனர். இதேபோன்றுதான் மம்தானியும் கொலம்பியா பல்கலையில் தன்னை ஒரு கறுப்பினர் என்று சொல்லி, இடஒதுக்கீட்டை பெற்று கல்வி பயின்றிருக்கிறார் என்று விமர்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதெல்லாம் உப்பு, சப்பில்லாத குற்றச்சாட்டுகள் என்று, விமர்சனங்களை மம்தானி லெப்ட் ஹான்டில் டீல் செய்து வருகிறார். எனது தந்தை ஒரு உகாண்டியன். தாய் இந்தியர். நான் பிறந்து வளர்ந்தது ஆப்பிரிக்காவில். அப்படி இருக்கையில் நான் எந்த பின்னனியை கொண்டவன் என்று குறிப்பிடுவது? என மம்தானி கேள்வி எழுப்பியுள்ளார். மட்டுமல்லாது இடஒதுக்கீடு தொடர்பான படிவங்களில் 'உகாண்டியன்-இந்தியன்' என்று ஒரு தனி கேட்டகிரி இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படி எதுவும் இடஒதுக்கீடு விண்ணப்பங்களில் இல்லை. எனவே, இவரது எதிர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விமர்சகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
ஆப்பிரிகாவை பூர்வீகமாக கொண்ட எலான் மஸ்க் இப்போது அமெரிக்காவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார். அவரை எதிர்த்து உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா? முடியாது எனில், மம்தானியை மட்டும் எதற்காக எதிர்க்கிறீர்கள் என்று அவரது ஆதரவாளர்கள் நோஸ் கட் செய்திருக்கிறார்கள்.
கமலா ஹாரீஸ் அதிபர் தேர்தலுக்கு நின்றபோது கூட இவ்வளவு விமர்சனங்கள் எழவில்லை. ஆனால், சாதாரண நியூயார்க் மேயராக தேர்தவாக இருக்கும் மம்தானி மீது எதற்காக இவ்வளவு விமர்சனங்கள்?
மம்தானி இடதுசாரி பொருளாதார கொள்கைகளை பின்பற்றுகிறார். நியூயார் மட்டுமல்லாது அமெரிக்கா முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள் வலதுசாரி கொள்கையாளர்கள். எனவே மம்தானியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த குற்றச்சாட்டுகள் எனவும் சொல்லப்படுகிறது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications