எலும்பை உறைய வைக்கும் "0" டிகிரி உறைபனி.. மினி காஷ்மீராய் நடுங்க வைக்கும் ஊட்டி.. சமாளிக்கவே முடியல
உதகையில் கடும்குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
நீலகிரி: உதகையில் குறைந்த பட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது... சமவெளி பகுதிகளில் "0" டிகிரி செல்சியஸுக்கு போய்விட்டது. இந்த கடும் உறை பனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி முடியும் வரை பனிக்காலம் நிலவும்.. ஆனால், இந்த வருடம், காலநிலை மாறுபாட்டால், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கின...
அதனால், இந்த முறை பனிக்காலமும் சற்று லேட்டாகவே தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் முழுக்க நீர் பனிப்பொழிவின் தாக்கம் ஏற்பட்டது..

புல்வெளி புல்வெளி
பிறகு, நவம்பர் 22-ம் தேதி ஊட்டியில் உறைபனிப் பொழிவு தொடங்கிய ஒரு வாரத்துக்குள், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்டது. அப்போதுதான், மேன்டூஸ் புயல் தாக்கம் காரணமாக உறைபனி முற்றிலும் நின்றுவிட்டது... இதற்கு பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஊட்டியில் மறுபடியும் உறைபனியின் தாக்கம் நிலவியது.. அப்போது, ஊட்டி தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் பனி படர்ந்து நிறைந்திருந்தது.. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி கொட்டி கிடந்தது.

புடைக்கும் நரம்புகள்
உதகை மக்கள் இந்த தொடர் பனிப்பொழிவால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த வாரம் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் ஓரளவு அதிகரித்த நிலையில், மறுபடியும் கடும் குளிர் வாட்ட தொடங்கிவிட்டது.. பச்சை புல்வெளிகளில் உறை பனி பொழிவு ஏற்பட்டு வெள்ளை பட்டு கம்பளம் போல் காட்சி தருகிறது.. பகல் நேரங்களில் ஓரளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை 3 மணிக்கே குளிர் சூழ்ந்துவிடுகிறது.. அதிகாலை 9 மணி வரை இந்த குளிர் விலகாமல் உள்ளது.. இதனால், நரம்புகளே புடைத்து கொள்ளும் அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது .

மினி காஷ்மீர்
ஊட்டி நகரம், தலைகுந்தா, காந்தள் பகுதிகளிலும் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.. வாகன ஓட்டிகள், உதகை நகராட்சி சந்தையில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சாலை ஓரங்களில் தீமூட்டி குளிரை சமாளிக்க வேண்டிய நிலையும் உள்ளது.. இந்த பனியிலும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஊட்டியை ரசித்து செல்கிறார்கள்.. இன்றைய தினம் உறைபனி, 2 டிகிரி செல்சியஸ் தொட்டுவிட்டது.. புல்வெளிகள், மரம், செடி, வாகனங்களில் பனிக்கட்டிகள் படிந்து கிடக்கின்றன.. இதனால் ஊட்டியே, ஒரு "மினி காஷ்மீர்" போல காணப்படுகிறது.

உறைஞ்சு போயிடுச்சே
2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய உறைபனிபொழிவானது, இன்று கடும் தாக்கத்தை தந்துள்ளது.. நகர பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சமவெளி பகுதிளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று பதிவாகி உள்ளது.. இந்த கடும் பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைப் பனி சூழ்ந்து காணப்பட்டுள்ளது.. இதனால் வாகனங்களில் டீசல் உறைந்து போய்விடுவதால், காலை வேளையில், வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.. இந்த மாதம் இறுதிவரை இப்பனி பொழிவு இப்படியேதான் அதிகரித்து காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications