நீலகிரியில் 40 நாட்களில் 10 புலிகள் மரணம்.. மர்மம் என்ன? ஆய்வு நடத்தும் வனத்துறையினர்!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. இதையடுத்து புலிகளின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய புலிகள் ஆணைய குழுவினர் ஊட்டிக்கு நாளை வருகிறார்கள்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டமானது பெரும்பாலான பகுதி வனப்பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், சிறுத்தைகள், காட்டு எருமை, மான்கள், சிறுத்தைகள் என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

அண்மைக்காலமாக இங்கு புலிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 17ஆம் தேதி சின்னக்குன்னூர் வனப்பகுதியில் ஒரு ஆண் புலிக்குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் அந்த குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் சில உடல் பாகங்களை ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கையில் ஆண் புலிக்குடி தாய்ப்பால் கிடைக்காததால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மற்ற குட்டிகளையும் தாய்ப்புலியையும் வனத்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சின்ன குன்னூர் வனப்பகுதியில் ஏற்கெனவே புலிக்குட்டி இறந்த பகுதியில் மேலும் 3 பெண் புலிக்குட்டிகளும் இறந்து கிடந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு குட்டி மீட்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிரது. இதையடுத்து அந்த உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
புலிக்குட்டிகள் தனியாக் இருந்ததால் தாய்புலியின் நிலையை அறிய 40 பேர் கொண்ட 5 குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தாய்ப்புலியை தீவிரமாக தேடி வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி மாவட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் 10 புலிகள் வரை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது வன ஆர்வலர்களிடையே வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரிக்க தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நாளை ஊட்டிக்கு வருகிறார்கள்.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 6 புலிக்குட்டிகள் இறந்த பகுதி மற்றும் எமரால்டு நடுவட்டம், கார்குடி ஆகிய வனப்பகுதிகளுக்கு நேரில் சென்று தடயங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர். மரபணு குறைபாடு காரணமாக இரு வெள்ளைப் புலிகளும் இறந்துள்ளன.
கடந்த 40 நாட்களில் பெரிய புலிகளும் குட்டி புலிகளும் இயற்கைக்கு மாறாக இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக புலிகள் கணக்கெடுப்பானது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆனால் இந்த கணக்கெடுப்பை இனி ஆண்டுக்கு ஒரு முறை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதகையில் மட்டும் 52 புலிகள் உள்ளது. இவற்றை தீவிரமாக கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவலாஞ்சி அணை அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் இரு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications