"சாம்பார் சாதம்" சாப்பிட்ட புலி.. அதைவிடுங்க, 2 புலிகள் உடம்பிலும் காயமே இல்லயாமே.. வெலவெலத்த நீலகிரி
ஊட்டி: நீலகிரியில் மேலும் 2 புலிகள் இறந்துள்ளது, மிகுந்த அதிர்ச்சியை தந்துவருகிறது.. இதற்கான காரணத்தையும் வனத்துறையினர் கண்டறிந்து வருகிறார்கள்.
2 வருடங்களுக்கு முன்பு, நீலகிரியில் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்துவிட்டது.. விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், புலி எப்படி இறந்து போனது என்பது குறித்து விசாரணையை ஆரம்பித்தனர்.

சாம்பார் சாதம்: அந்த புலிக்கு கிட்டத்தட்ட 15 வயது இருக்கும்.. சாம்பார் சாதம் சாப்பிட்டதால்தான் புலி இறந்துவிட்டதாகவும், கிராமப்புறங்களுக்கு வருவதை தடுக்க யாராவது விஷம் வைத்திருப்பார்களா என்றெல்லாம் விஷயங்கள் பரவின.
எனினும், போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டால்தான் புலி எப்படி இறந்தது என்றே உறுதி செய்ய முடியும் என்று சொல்லப்பட்டது. அதன்படி கால்நடை மருத்துவர்களை அழைத்து உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.. அப்போது சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்தது.. பசியில் இருந்த புலி, சாப்பிட எதுவும் கிடைக்காததால், குப்பைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. அந்த குப்பையில், துண்டு பிளேடு இருந்திருக்கிறது.அது என்னவென்றே தெரியாமல் புலி சாப்பிட்டிருக்கிறது.
வயிற்றுக்குள் சென்ற பிளேடு நாளுக்கு நாள் வேலை காட்டி வந்துள்ளது.. பிறகுதான் வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறது. ஒரு செ.மீ அளவுள்ள கூர்மையான பிளேடு வயிற்றுக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது... குப்பையில் கண்டதையும் போட வேண்டாம் என்று பொதுமக்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும், இந்த அதிர்ச்சி நிகழ்ந்துள்ளது. கம்பீரமான புலியின் உயிரை, ஒரு துண்டு பிளேடு பறித்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் தந்திருந்தது.
2 புலிகள்: இதோ இப்போதும் 2 புலிகள் இறந்துள்ளன.. அவலாஞ்சி வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளன.. 65 சதவீத வனப்பகுதிகளை கொண்ட நீலகிரியில், ஏகப்பட்ட வனவிலங்குகள் உள்ளன..
ஆனால், கடந்த சில நாட்களாகவே தீவன பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வர ஆரம்பித்துள்ளன.. இதைத்தவிர, வனப்பகுதியில் வனவிலங்குகளுடன் நடக்கும் மோதல்கள், மற்றும் புதுபுது நோய்கள் காரணமாக, அவைகள் உயிரிழக்கும் சூழலும் அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள்.
ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு அருகில், அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை உள்ளது.. இதற்கு பக்கத்திலேயே காட்டுப்பகுதியில் 2 புலிகள் இறந்துள்ளன.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தகவல் தந்துள்ளனர்.. அதிகாரிகளும் விரைந்து வந்து, புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்..
புலிகள்: ஆனால், புலிகள் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.. இரண்டுமே பெண் புலிகள் என்கிறார்கள்.. அவை இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்குமாம்.. உடலில் காயங்களும் எதுவும் இல்லையாம்.. அதனால், போஸ்ட் மார்ட்டம் செய்தால்தான், புலிகள் எப்படி இறந்தன என்பது தெரியவருமாம். கடந்த ஆகஸ்ட் மாதம்கூட 2 புலிக்குட்டிகளும் இறந்தன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 புலிகள் இறந்திருப்பது, சமூக ஆர்வலர்கள், நீலகிரி மக்களிடையே அதிர்ச்சியை தந்து வருகிறது.
இந்நிலையில், இந்த 2 புலிகள் இறந்தது தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. புலிகள் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததுமே, அதிகாரிகள் நேரடியாக சென்று பார்த்தபோது, அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. இன்னொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்துள்ளது..
காயங்கள்: உடல்கள் அழுகிய நிலையில் இருந்தாலும், புலிகளின் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. அதனால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டதால் பலியாகவில்லை என்கிறார்கள் வனத்துறையினர்..
ஆனால், நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக சொல்கிறார்கள்.. காட்டு விலங்குகளை கொன்று, அவைகளை அவர்கள் தங்கள் ஊருக்குள் எடுத்து சென்று விற்பனையும் செய்து வருகிறார்களாம்.. புலியின் தோல், பற்கள் போன்றவை மதிப்பு வாய்ந்தது என்பதால், வனவிலங்கு வேட்டைக்காரர்கள் வியாபார நோக்கத்துக்காக புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் கிளம்பி உள்ளது.
விசாரணை தீவிரம்: அவர்கள் சம்பவ இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது எப்படி இறந்தது என்பது பற்றி மிக தீவிரமான விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications