திறந்திருந்த வீடு.. அறுபட்டு கிடந்த உமா.. அலறி துடித்த அபிஷேக்.. அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி
ஊட்டியில் பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்
Recommended Video
ஊட்டி: வீட்டில் தனியாக இருந்த உமாவின் கழுத்தை அறுத்து யார் கொலை செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள் என்றே தெரியவில்லை. இந்த சம்பவம் ஊட்டியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டியில் நொண்டிமேடு என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வந்தவர் உமா. இவருக்கு வயசு 43. இவரது கணவர் பெயர் பசுவராஜ். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்து வந்துவிட்டார்.
உமாசங்கர், அபிஷேக் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். அதனால் மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். உமாசங்கர் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் அபிஷேக் தனியார் காட்டேஜ் ஒன்றில் பார்ட் டைம் வேலை இரவு நேரங்களில் பார்க்கிறார்.

ரத்த வெள்ளம்
வழக்கம்போல, நேற்று வேலைக்கு சென்றுவிட்டு, இன்று காலை வீட்டுக்கு வந்தார். எப்பவுமே கதவு மூடியேதான் இருக்கும். ஆனால் இன்று கதவு திறந்திருந்ததால், உள்ளே சென்று பார்த்தார் அபிஷேக். அப்போதுதான், உமாவின் கழுத்து அறுபட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாகி கிடப்பதை கண்டு அலறினார்.

கொள்ளை
உடனடியாக போலீஸாருக்கு தகவல் சொல்ல, மோப்ப நாயுடன் விசாரணை ஆரம்பமானது. வீட்டிற்குள் எந்த பொருளுமே திருடு போகவில்லை என்பதால், இந்த கொலையை கொள்ளையர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

விசாரணை
உமாவுக்கு வேறு யாருடனாவது முன் விரோதம் இருந்ததா அல்லது உமா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து யாராவது வம்பு செய்ய முற்பட்டர்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

அதிர்ச்சி
ஆனால் கிச்சனில் கொலை செய்த உமாவை பெட்ரூமில் கொண்டு வந்து போட்டு விட்டு போயுள்ளதாகவும், 2 ரூமிலும் ரத்தக்கறை உள்ளதாகவும் போலீசார் சொல்கிறார்கள். பொதுமக்கள் நடமாட்டம் எப்போதுமே நொண்டிமேடு பகுதியில் இருக்கும்நிலையில், பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊட்டி மக்களை உறைய வைத்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications