நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மளிகை வாங்க கடைக்கு போனவர்.. புதருக்குள்ளிருந்து வந்த சத்தம்.. அங்கே நடந்த பகீர்.. நடுங்கிய நீலகிரி

முதுமலையில் புலி தாக்கி விவசாயி இறந்துவிட்டார்

Google Oneindia Tamil News

நீலகிரி: மளிகை வாங்குவதற்காக காட்டு வழியே கடைக்கு போய் கொண்டிருந்த விவசாயியை புலி கப்பென இழுத்து சென்று கொன்றவிட்டது..!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் சில கிராமங்களில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், முதுமலை வனப் பகுதியில் உள்ள முதுகுழி கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சுகிருஷ்ணன்.. இவர் ஒரு விவசாயி.. 49 வயதாகிறது.

பரீட்சைக்கு நேரமாச்சு.. வேகமாக சென்ற மாணவி.. திடீரென வந்த புலி.. பீதியில் மாணவர்கள்பரீட்சைக்கு நேரமாச்சு.. வேகமாக சென்ற மாணவி.. திடீரென வந்த புலி.. பீதியில் மாணவர்கள்

புலி

புலி

இவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக காட்டு வழியே மதியம் 1.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போது அங்கிருந்த ஒரு புதரில் பதுங்கியிருந்த புலி, திடீரென அவர் மீது பாய்ந்தது அவரது கழுத்தையும் கவ்வி இழுத்து சென்றது.

 பரிதாப பலி

பரிதாப பலி

இதில், விவசாயி மூச்சுத்திணறி அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார்.. இதுகுறித்த தகவலின் பேரில் வனச்சரகர் தயாநந்தன், மருத்துவர் ராஜேஷ்குமார் உட்பட வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. அந்த இடத்தை ஆய்வு செய்து, விவசாயியின் உடலை மீட்கும்போது, அதற்குள் அந்த பகுதி மக்கள் குவிந்துவிட்டனர்..

முற்றுகை

முற்றுகை

விவசாயியின் சடலத்தை பார்த்து கொந்தளித்த அவர்கள், "முதுமலை மாற்றிட பிரச்சனைக்கு உடனே தீர்வு வேண்டும்.. அதுவரை சடலத்தை எடுக்க விடமாட்டோம் என்று வனத்துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு , அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்.. பிறகு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி, சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியின் ஒரு பகுதியை உயிரிழந்த குஞ்சுகிருஷ்ணனின் உறவினர்களிடம் வனத்துறையினர் வழங்கினர். இதுதொடர்பாக வனத்துறையினர் சொல்லும்போது, "குஞ்சுகிருஷ்ணன் சடலமாக கிடந்த பகுதியில் புலியின் கால்தடங்கள் கண்டறியப்பட்டன... அவர் எதிர்பாராதவிதமாக புலியின் வழித்தடத்தில் வந்ததால், புலி அவரை தாக்கி கொன்றுள்ளது" என்றனர்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

ஆனால், அந்த பகுதி மக்கள் சொல்லும்போது, "முதுகுழி கிராமம் பழங்குடியினர் மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் உள்ள கிராமம்... மறு குடியமர்வு காலதாமதமாகி வரும் நிலையில், இந்த கிராமத்துக்கான நடைபாதை பராமரிக்கப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது.. இந்த புதரில் மறைந்திருந்த புலிதான், விவசாயியை தாக்கி கொன்றுள்ளது.. அதனால் நடைபாதையை சீரமைத்து தர வேண்டும்" என்று கேட்டு கொண்டுள்ளனர்.

English summary
49 year old Man dies as Tiger attacks in Nilgiri District
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X