4, 5 ஆண்களுடன் தொடர்பு.. சொல்லியும் கேட்கலை.. குத்தி கொன்றேன்.. நடுங்க வைக்கும் கோத்தகிரி கொலை
கோத்தகிரி இளம்பெண் படுகொலையில் ஒருவர் கைதாகி இருக்கிறார்.
Recommended Video

கோத்தகிரி: "ஒருத்தர், ரெண்டு பேர் இல்லை.. பல ஆண்களுடன் கள்ள தொடர்பு.. அதோடு நான் கட்டின தாலியையும் கழட்டி எறிஞ்சா.. அதான் கத்திரிக்கோலால் கொன்றேன்" என கோத்தகரி இளம்பெண் கொலையில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தை உலுக்கி வரும் செய்தி கோத்தகிரி லோகேஸ்வரி கொலைதான். கணவன் வெளிநாட்டில் வேலைபார்க்க, 4 வயது மகனுடன் தனியாக வீடு எடுத்து குடியிருந்து வந்தார் லோகேஸ்வரி.
[பல்கலை எச்ஆருக்கு இச்.. இச்.. காரை லாட்ஜாக்கிய நிர்மலா... வடிவேல் காமெடி போல் நீளும் உல்லாச லிஸ்ட்!]

சிறுவன் கழுத்து அறுப்பு
கடந்த ஞாயிறு இரவு லோகேஸ்வரி கழுத்து அறுபட்டு பிணமாக கிடந்தார். பக்கத்திலேயே 4 வயது சிறுவன் கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தான். உடனடியாக அவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்து தங்கள் விசாரணை துவக்கினர்.

சிக்கிய கொலையாளி
லோகேஸ்வரியின் செல்போனை ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட ஒரு எண் மட்டும் ஸ்விட்ச் ஆப் செய்யப்படவே அதன் பேரில் சந்தேகம் வலுத்தது. பிறகு அந்த எண் சம்பந்தப்பட்டவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது லோகேஸ்வரியை கொன்றது தான்தான் என ஒப்புக் கொண்டார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:

லோகேஸ்வரியை சந்தித்தேன்
என் பெயர் கவுரி சங்கர். வயது 27. ஈரோட்டில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். பகுதி நேரமாக உடல் எடையை குறைக்கும் பொருட்களை விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறேன். இதுக்கான கூட்டம் ஈரோட்டில் மாச மாசம் நடக்கும். அப்போதுதான் லோகேஸ்வரியை பார்த்தேன். கோத்தகிரியில் பெற்றோருடன் இருப்பதாக கூறினார்.

கோத்தகிரி செல்வேன்
எனக்கு அவரை ரொம்ப பிடித்து போயிடுச்சு. கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற விஷயமே எனக்கு தெரியாது. அதனால் சென்னிமலை கோயிலில் சில மாதத்துக்கு முன்னாடிதான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வீட்டில் ஆள் இல்லாத சமயங்களில் கூப்பிடுவார். அதனால் அடிக்கடி கோத்தகிரி போய் தங்கிவிட்டு வருவேன்.

4,5 ஆண்களுடன் தொடர்பு
ஆனால் அப்போதுதான் எனக்கு தெரியவந்தது அவருக்கு திருமணம் ஆன விஷயம். அது மட்டும் இல்லாமல் அதே பகுதியில் உள்ள 4, 5 ஆண்களுடனும் லோகேஸ்வரிக்கு கள்ள உறவு இருந்ததும் கண்டுபிடித்தேன். கடந்த 27ந்தேதி கோத்தகிரி சென்ற நான் இதை பற்றியெல்லாம் கேட்டேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது நான் கட்டிய தாலியை கழட்டி லோகேஸ்வரி வீசியெறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், லோகேஸ்வரியை அங்கிருந்த கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி கொன்றேன்.

கோவை மத்திய சிறை
இது எல்லாத்தையும் 4 வயது மகன் பார்த்து கொண்டே இருந்தான். அவன் இதனை வெளியில் சொல்லிவிடுவான் என்ற பயத்தில் அவன் கழுத்தையும் அறுத்துவிட்டு, தாலியையும் எடுத்து கொண்டு தப்பிவிட்டேன். பயன்படுத்தி வந்த சிம்கார்டையும் கழட்டி விட்டேன்." இவ்வாறு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, போலீசார் கோத்தகிரி நீதிமன்றத்தில் கவுரி சங்கரை ஆஜர்படுத்திவிட்டு பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications