தூங்காமல் தவித்த ஊட்டி.. முப்படை தளபதி மரணம்.. நாளை ஒருநாள் முழு கடையடைப்பு.. சல்யூட்..!
நாளை ஒருநாள் ஊட்டியில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
ஊட்டி: குன்னூரில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் நாளை ஊட்டியில் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது..!
குன்னூரில் நடந்த கோர விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்து வருகிறது.. நஞ்சப்ப சத்திரம் குடியிருப்பை ஒட்டிய காட்டுப்பகுதியில் இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
மரத்தில் மோதியதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது... சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் 11 பேருமே உயிரிழந்தனர்... உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேரில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் முக ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்.
ராணுவ வீரர்களின் உடல்கள் 13 ஆம்புலன்ஸ்கள் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நாளை உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன.... இந்த விபத்து சம்பவ அதிர்ச்சியில் இருந்து நீலகிரி மக்கள் இன்னமும் மீளவில்லை..
குன்னூரில் இருந்து நஞ்சப்ப சத்திரம் 5 கி.மீ தூரம்தான் உள்ளது.. அதேபோல ஊட்டியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.. வனப்பகுதிக்கு உள்ளே செல்வதால், மக்களால் இயல்பாக வாகனங்களில் செல்ல முடியாத நிலைமை உள்ளது. வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் அருகிலேயே இருப்பதால், ராணுவத்தின் முக்கியத்துவத்தை நீலகிரி மக்கள் இயல்பாகவே உணர்ந்து வைத்துள்ளனர்.. அடிக்கடி ஹெலிகாப்டர்கள் இங்கு வந்து செல்வதும் வழக்கம்..
நேற்றைய தினம் விபத்தில் இருந்து ஊட்டி மக்கள் மீளவே இல்லை.. பெரிதும் வேதனையில் தவித்து வருகின்றனர்.. எனவே ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை முழு கடையடைப்பை கடைப்பிடிக்கவுள்ளனர்... நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டல்கள் உட்பட அனைத்து வகையான கடைகளையும் அடைக்க ஊட்டி மக்கள் முடிவு செய்துள்ளார்கள்... எனவே நாளை ஒருநாள் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications