Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயமுறுத்தும் பறவை காய்ச்சல்.. கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழிகள் கொண்டுவர தடை.. தீவிரத்தில் குமரி

கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தொடர்கிறது

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருவதையடுத்து, தமிழகத்தின் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...

கேரளாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு திணறி வருகிறது.. இந்நிலையில், கேரளாவுக்கு அடுத்த சோதனையாக பறவை காய்ச்சல் புகுந்துவிட்டது..

குறிப்பாக, ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள், வாத்துகள் என அதிகமாக இறந்து விழுந்தன..

 வாத்து, கோழிகள்

வாத்து, கோழிகள்

H5 N1 என்ற புதிய வகையிலான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.. எனவே, வாத்து, கோழிகளை கொன்று அழிக்கும் பணியில் கேரள கால்நடை பராமரிப்பு துறை ஈடுபட்டுள்ளது. இதனிடையே, அங்கு பறவை காய்ச்சல் பரவலை தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன... தமிழக - கேரள எல்லைப்பகுதிகளான கம்பம்மெட்டு, குமுளி சோதனைச் சாவடிகளில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை கண்காணிப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது..

கண்காணிப்புகள்

கண்காணிப்புகள்

அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு செக்போஸ்ட்களில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது... கேரளாவில் இருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் கிருமிநாசினி தெளித்தபிறகே கன்னியாகுமரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கேரளாவில் இருந்து கோழிகள், வாத்து, கோழி இறைச்சி, முட்டை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது, 90 நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.. அதேசமயம் தமிழகத்தில் இருந்து கோழிகள், முட்டைகள் கேரளாவிற்கு கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 செக்போஸ்ட்டுகள்

செக்போஸ்ட்டுகள்

இதேபோன்று, தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய 3 மலைச்சாலைகளில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கேரள எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கோழிகள் கொண்டுவர தற்காலிகமாக தடை விதித்து கலெக்டர் அம்ரித் தடை விதித்துள்ளார்.. இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார்..

நீலகிரி

நீலகிரி

நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நீலகிரியில் பரவலை தடுக்க கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை வாகனங்களில் கொண்டு வருவதை கண்காணிக்க 8 சோதனைச் சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் குழுவினர் காவல்துறை, வனத்துறை, வருவாய்துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 பறவை காய்ச்சல்

பறவை காய்ச்சல்

பறவைக் காய்ச்சல் கோழி, வாத்து, வான்கோழி, வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்கக்கூடியது. பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாத்து, வான்கோழி முதலிய பல்வேறு இன பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக் கூடாது. வெளியாட்கள், வாகனங்கள் மற்றும் விலங்குகள் பண்ணைக்குள் நுழையக்கூடாது.

உபகரணங்கள்

உபகரணங்கள்

உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. உபகரணங்கள் மாதம் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் பரவாது. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும். எனவே கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக மாநில பிற பகுதிகளில் இருந்து கோழிகள், பறவைகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+