ஹாயாக மாடி ஏறிய சிறுத்தை.. கண்களில் அத்தனை பசி!.. வீடியோவை பார்த்து ஈரக்குலையே நடுங்கி உறைந்த ஊட்டி!
உதகை: உதகை அருகே குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Recommended Video
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் உதகை அருகே உள்ள ரிச்சிங் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகே கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வனவிலங்குகள்
இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே வனவிலங்குகள் உலா வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ரிச்சிங் காலனி பகுதியில் குடியிருப்புகளின் அருகே உலா வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தது.

நடமாடிய காட்சி
குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாடிய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். மேலும் குடியிருப்புகளின் அருகே கடந்த சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறை சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ வைரல்
அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று மெதுவாக மாடிப் படிகளில் ஏறுகிறது. பின்னர் அங்குள்ள சிட்டிங் ஏரியாவில் துணியால் மூடப்பட்ட இடங்களை மோப்பம் பிடிக்கிறது. பின்னர் கண்ணாடி அறையை நின்று பார்க்கிறது. அதன் முகமே அதில் பிரதிபலித்ததால் ஏதோ செமையாக தீணி மாட்டிச்சி என நினைத்த சிறுத்தைக்கு, அய்யோ அது நம் முகம் என ஏமாற்றமடைந்தது.

இரை தேடி வந்த சிறுத்தை
இப்படியே ஒவ்வொரு இடமாக தனக்கான இரை இருக்கிறதா என பார்த்துக் கொண்டே வந்தது. இந்த வீடியோ வெளியான நிலையானதை பார்க்கும் மக்கள், சிறுத்தை வந்த நேரத்தில் மறதியாக மக்கள் யாரேனும் இருந்திருந்தால்... என்னவாகியிருக்கும் என நினைத்தால் ஈரக் குலையே நடுங்குகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications