நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதுக்கு தயக்கம்! என்ன உதவின்னாலும் என்னிடம் கேளுங்க! தோடர் பழங்குடி மக்களை மனம் குளிர வைத்த ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

நீலகிரி: தோடர் பழங்குடியின மக்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதற்கு தடையே இருக்காது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் தோடர் பழங்குடியின குடியிருப்புகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதல் முதலமைச்சர் ஸ்டாலின் என்பதால் அவரை உற்சாகம் பொங்கம் தோடர் பழங்குடி மக்கள் வரவேற்றனர்.

அது தொடர்பான விவரம் வருமாறு;

 ஊட்டி டிரிப்பில் முக்கிய அமைச்சரை கழற்றிவிட்ட முதல்வர் ஸ்டாலின்! பம்பரமாக சுழன்று பணியாற்றிய ஆ.ராசா! ஊட்டி டிரிப்பில் முக்கிய அமைச்சரை கழற்றிவிட்ட முதல்வர் ஸ்டாலின்! பம்பரமாக சுழன்று பணியாற்றிய ஆ.ராசா!

பழங்குடி மக்கள்

பழங்குடி மக்கள்

நீலகிரி மாவட்டம் பகல்கோடு மந்து கிராமத்திற்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோடர் பழங்குடியின குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும் அக்கிராமத்தைச் சேர்ந்த தோடர் பழங்குடியின
மக்களிடம், அவர்களது வாழ்க்கை, கலாச்சார முறை குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

முதல்முறை விசிட்

முதல்முறை விசிட்

அப்போது அம்மக்கள் முதலமைச்சர் ஒருவர் தங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை என்றும், தோடர் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.

வனப்பகுதி

வனப்பகுதி

மேலும், மாவட்ட அளவில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தனி இணைய முகப்பு (Portal) ஆரம்பித்து தங்களது
தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு நன்றி தெரிவித்தனர். நீலகிரியில் வனப்பகுதியை 33 சதவீதமாக பெருக்குவதாக அறிவித்து, வனப்பகுதிகளையும்,
வனவிலங்குகளையும் காப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கும் தோடர் இன மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 தொடர்பு கொள்ளலாம்

தொடர்பு கொள்ளலாம்

பழங்குடியின மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, நீலகிரியின் நிலத்தை இந்த அரசு காக்கும். மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும், இந்த அரசு பாதுகாக்கும் என்றும், பகல்கோடு மந்து பகுதியில் பால் பதப்படுத்தும் நிலையம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இப்பகுதி மக்களுக்காக, பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒரு சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார். எந்த உதவி தேவைப்பட்டாலும், தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், உங்களுக்காக அரசு அனைத்துவித உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

English summary
Cm Stalin assures to Thodar Tribal people, if they needed any help thatthey would contact me
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X