ஆஸ்கர் தம்பதியை கௌரவிப்பதில் ஸ்டாலின் அசுர வேகம் - ஆஸ்திரேலியா வாழ் எழுத்தாளர் பாராட்டு
நீலகிரி: கடந்த 2017ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை பகுதியில் தாயைப் பிரிந்த ஆண் குட்டி யானையும், 2018ஆம் ஆண்டு தாயைப் பிரிந்து சத்தியமங்கலம் பகுதியில் சுற்றித் திரிந்த பெண் குட்டி யானையும் முதுமலைக்குக் கொண்டு வரப்பட்டன.
இந்த யானைகளுக்கு ரகு, அம்மு எனப் பெயரிடப்பட்டன. தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானைக் குட்டிகளை முதுமலை காட்டில் வைத்து பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி வளர்த்து வந்தனர்.
அந்தக் குட்டிகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வந்தனர். அவை இரண்டு ஆண்டுகளாக இத்தம்பதியுடன் வாழ்ந்துவந்தன. இந்த உண்மைக் கதையைக் கொண்டு ' தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. அதையடுத்து பொம்மன், பெள்ளி தம்பதி இன்று உலகம் முழுக்கப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளது.
ஆஸ்கர் வென்ற இந்தத் தம்பதியைச் சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலினின் அதிரடி வேகம்:
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " ஆஸ்கர் விருதினைப் பெற்றுள்ள The Elephant Whisperers படம், நம் வனத்துறை செயல்பாடுகளை உலகறிய செய்துள்ளது. திரு பொம்மன் திருமதி பெள்ளி ஆகியோரைப் பாராட்டி ரூ.1 லட்சம் வழங்கினேன். தெப்பக்காடு & கோழிகமுத்தி யானைகள் முகாம்களில் உள்ள 91 பணியாளர்களுக்கு தலா 1 லட்சமும், வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவியும் அறிவித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சுப்ரியா சாகு ஐஏஎஸ், அவரது ட்விட்டர் பதிவில், "எங்களின் பேசப்படாத நாயகர்களான பெள்ளி மற்றும் பொம்மனுக்கு மதிப்பான அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ரகு மற்றும் அம்மு போன்ற விலைமதிப்பற்ற எங்களின் யானைகளைப் பராமரித்து வரும் அனைத்து பாகன்களுக்கு பணிவான நன்றி. இவர்கள் அனைவரையும் முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்
வனத்துறை அமைச்சர் மதி வேந்தன், "இன்றைக்குப் பொம்மன், பெள்ளி ஆகிய இருவரும் உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களுக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள். இவர்களை வைத்து எடுக்கப்பட்ட Elephant whisperer என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த இருவரும் நமது வனத்துறையில்தான் பணியாற்றி வருகிறார்கள்.
நமது முதல்வர் ஸ்டாலின் இவர்களைக் கௌரவிக்கும் விதமாக, அடையாளப் பரிசை வழங்கி இருக்கிறார். மேலும் இருவருக்கும் தலா 1 லட்சம் பரிசை வழங்கி இருக்கிறார். இவர்களைப் போலவே நமது வனத்துறையில் 91 பேர் யானை பாகன்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக தலா 1 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வனத்துறை அமைச்சர் மதி வேந்தன் மகிழ்ச்சி:
அதேபோலவே அனைத்து பாகன்களுக்கு வசிப்பதற்குத் தரமான வீடு கட்டி தருவதற்கு ஆணையிட்டுள்ளார். ஒரு குடும்பத்திற்கு தலா 10 லட்சம் என்ற அளவில் சுமார் 9.10 கோடி ரூபாயில் அந்த வீடுகளைக் கட்டித்தரச் சிறப்பு நிதி அளித்துள்ளார்.
நம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இரண்டு யானைகள் முகாம்கள் உள்ளன. ஒன்று, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம். இரண்டு, கோழிகமுத்தி யானைகள் முகாம். கடந்த ஆண்டே தெப்பக்காடு முகாமை சீரமைப்பதற்காக 7 கோடி ரூபாயை முதல்வர் அறிவித்திருக்கிறார்.
இப்போது கோழிகமுத்தி முகாமை சீரமைக்க 5 கோடி ரூபாயை அறிவித்திருக்கிறார். மேலும் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்பதற்காகக் கோயம்புத்தூர் அருகே சாடிவயல் பகுதியில் யானை முகாம் அமைப்பதற்காக ரூ. 8 கோடியை ஒதுக்கித் தந்துள்ளார்.
இப்படி நிதி அளிப்பது முதல்முறை அல்ல; ஒட்டுமொத்தமாகக் கடந்த இரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் பல அறிவிப்புகளை வனத்துறைக்காக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வந்துள்ளார்.
இதைக் கடந்து வனப்பகுதியைக் காப்பாற்ற, யானைகளைக் காப்பாற்ற, காட்டின் பரப்பளவை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை ஆட்சியில் பொறுப்பேற்றது நாள் முதல் செய்துவருகிறார். அதன் தொடர்ச்சியாக யானைகளின் பாதுகாப்பில் இரவு பகல் பாராமல் உழைத்துவரும் பாகன்களுக்காக இப்போது வீடு கட்டித்தரும் திட்டத்தைச் செயல்படுத்தித் தந்துள்ளார்.
ஆகவே இந்தப் பாகன்களின் குடும்பத்தினர் சார்பாகவும். வனத்துறை அமைச்சர் என்ற அடிப்படையிலும் முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார் அமைச்சர் மதி வேந்தன்

ஆஸ்கர் தம்பதி சொன்ன உண்மைகள்:
விருதுகளைப் பெற்றுக்கொண்டு பேசிய பொம்மன், "நாங்கள் எதிர்ப்பாக்கவே இல்லை. இந்தளவுக்கு இந்தப் படம் பெரிய விருதுக்கு எல்லாம் போகும் என நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
முதல்வர் ஸ்டாலின் அய்யா பரிசு வழங்கியுள்ளார். எங்களை அழைத்துச் சந்தித்து வாழ்த்து சொன்னார். அவருக்குப் பெரிய மனசு. நாங்கள் எதையும் அவரிடம் கேட்கவில்லை. அவரே உதவி செய்தார். சால்வைப் போட்டார். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இது எங்களுக்கு என்று இல்லை; நமது முதுமலை யானைகள் காப்பகத்திற்கே பெருமை. அப்படித்தான் இதைப் பார்க்கிறோம்.
தொடர்ந்து இதைப்போலக் காட்டில் தப்பி வரும் யானைக் குட்டிகளை வளர்க்க ஆர்வமாக உள்ளோம். அதை இன்னும் அதிக பாசத்துடன் வரும் காலங்களில் வளர்த்து வனத்துறையிடம் ஒப்படைப்போம். நாங்கள் மட்டும் இல்லை;
இப்போது இந்த விருதினால், அனைத்து பாகன்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அனைவருக்கும் முதல்வர் வீடு தருவதாகச் சொல்லி இருக்கிறார். அவர்களும் எங்களைப் போல வரும் காலத்தில் சிறப்பாக பணியாற்ற இந்த உதவிகள் உறுதுணையாக இருக்கும்.
மக்களிடம் நாங்கள் சொல்வது ஒன்றுதான், பொதுவாக யானைகளை நாம் துன்புறுத்தக் கூடாது. வனத்திற்குள் சுற்றுலா வருகிறவர்கள் யானை மீது கல் எடுத்து வீசுவது, அதைச் சீண்டுவது என்பதை எல்லாம் செய்யக் கூடாது. பிறகு அதற்குக் கோபம் வந்தால், நம்மைத் தாக்க ஆரம்பித்துவிடும்.
ஆகவே நாம் தான் எச்சரிக்கையாக, பொறுப்புணர்வுடன் நடத்துக் கொள்ளவேண்டும், அவை வாய் இல்லாத ஜீவன்கள். அவற்றை நாம் தான் அரவணைத்துச் செல்லவேண்டும்" என்கிறார் பொம்மன்
அவரைத் தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசிய பெள்ளி, "இந்த விருது வாங்கின செய்தி உலகத்திற்கே தெரிந்துவிட்டது. அதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா அழைத்திருக்கிறார்.
இப்போது எங்கே போனாலும் அதிகாரிகள் எங்களைப் பாராட்டுகிறார்கள். 'உங்களால் வனத்துறைக்கே பெருமை கிடைத்துவிட்டது' என்கிறார்கள். அது எங்களுக்கும் பெருமை இல்லையா?" என்கிறார்.

முதல்வருக்கு ஆஸ்திரேலியா எழுத்தாளர் வாழ்த்து:
தமிழக முதல்வர் ஸ்டாலினின் துரித நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் கார்த்திக் வேலு, "தமிழக அரசு முதுமலை மற்றும் ஆனைமலை யானை முகாம்களில் வேலை செய்யும் 91 யானை பாகன்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பொருட்டு 9 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவெல்லாம் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperer' ஆவணப்படத்தில் பாதிப்பில் நிகழ்ந்திருக்கிறது. அந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு ஆஸ்கரை விட இது பெரிய விருதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தில் காட்டப்பட்ட பொம்மன் - பெள்ளி தம்பதியினரை அரசுக் கௌரவித்திருக்கிறது.
ஒரு கலைப்படைப்பு, இவ்வளவு கவனத்தைப் பெறுவதும் , அதன் மூலம் உதவியும் ஆதரவும் தேவைப்படும் 100 பேர்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறை மாற்றம் நிகழ்ந்தது என்பதும் கலையின் பலம். கலைக்கு அவ்வளவு பலம் உண்டு. அது உயிரோட்டமான வாழ்க்கையைச் சொல்லுவதாலேயே வருகிறது. அந்த வகையில் பொம்மன் - பெள்ளி தம்பதியினர்தான் இதன் நாயகர்கள் .
காலத்தே செய்யும் உதவி என்று ஒன்றுண்டு. இந்தப் படத்தை இன்னும் பலர் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆனால் அரசு துரிதமாகச் செயல்பட்டு இந்த அங்கீகாரத்தையும் உதவித்தொகையையும் அறிவித்திருப்பது மகிழ்வளிக்கிறது" என்கிறார்
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications