தீர்ப்பு கொடுத்த திருப்பம்.. ஊட்டிக்கு விசிட் அடிக்கும் ராகுல்.. அப்படியே வயநாடு செல்ல திட்டம்
நீலகிரி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். வயநாடு செல்லும் முன்பாக ராகுல் காந்தி காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் விதித்த தீர்ப்பால் ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது.

இதனால், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்தது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். வயநாடு செல்லும் முன்பாக ராகுல் காந்தி காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் வருகிறார்.
இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9 மணியளவில் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக ஊட்டி செல்கிறார். ஊட்டியில் உள்ள எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வருகிறார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து பேசுகிறார். இதைத்தவிர, ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பையும் நேரில் பார்வையிட போகிறார்..
அத்துடன், ஊட்டி அருகில் முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடிகளைச் சந்தித்துவிட்டு, அப்படியே வயநாடு சென்று தொகுதி மக்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது. இதன்பின்னர் கூடலூர் வழியாக ராகுல் காந்தி வயநாடு செல்கிறார். முன்னதாக வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல்காந்தி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
ராகுல்காந்தி வருகையையொட்டி தனியார் தங்கும் விடுதி, முத்தநாடுமந்து கிராமத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வரப்போகிறார் என்றதுமே, கடந்த 2 நாட்களாகவே ஊட்டியே அமர்க்களம் ஆகிவருகிறது. வருங்கால இந்தியா அன்பு தலைவரை வரவேற்போம்.. கூடலூர் மாநகரை குலுங்க வைப்போம் என்று நீலகிரி மாவட்ட கூடலூர் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக மோடில் உள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications