இதுதான் தமிழ்நாடு.. வணங்குகிறோம்.. ராணுவ வீரர்கள் உடலுக்கு மக்கள் தந்த மரியாதை.. வியக்கும் வடஇந்தியா
ஊட்டி: ஊட்டியில் மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு தமிழ்நாடு மக்கள் அளித்த மரியாதைக்கு வடஇந்தியர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். தமிழர்களின் செயலை வடஇந்தியர்கள் வெகுவாக புகழ்ந்து உள்ளனர்.
Recommended Video
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹெலிகாப்டர் தரையிறங்கும் முன் ஏற்பட்ட இந்த விபத்தில் பயணிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் பலியான 13 பேரின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாலம் விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மக்கள் அஞ்சலி
இந்த நிலையில் மறைந்த வீரர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் வழி எங்கும் தமிழ்நாடு மக்கள் வரிசையாக நின்று மலர் தூவினார்கள். ஆம்புலன்ஸ் செல்லும் வழி முழுக்க மலர் தூவி மரியாதை செய்தனர். பலர் சல்யூட் அடித்தபடி வீரர்களுக்கு மரியாதை செய்தனர். பெண்கள், ஆண்கள் என்று பலரும் சல்யூட் அடித்தபடி மரியாதை செய்தனர்.

உருக்கம்
இன்னும் சிலர் ஆம்புலன்ஸ் வருவதை பார்த்து கண்களில் கண்ணீர்விட்டபடி கலங்கி நின்றனர். அதிலும் சில பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு சாலையில் நின்று ஓ என்று கண்ணீர்விட்டனர். இந்தியாவில் எந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பலியான போதும் அப்பகுதி மக்கள் இப்படி மரியாதை செய்தது இல்லை. இப்படி கண்ணீர்விட்டது இல்லை. மக்கள் கண்ணீர்விடும் இப்படிப்பட்ட காட்சிகளை கண்டது இல்லை.

கண்ணீர்
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகி கண்ணீர்விட்டது மொத்த தேசத்தையும் உலுக்கி உள்ளது. முக்கியமாக வடஇந்தியர்கள் பலர் இதை பாராட்டி உள்ளனர். தமிழர்கள் ராணுவ வீரர்களின் உடலுக்கு செலுத்திய மரியாதை வியக்க வைக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
|
இதயம்
இந்தியாவின் இதயத்தை மொத்த தமிழ்நாடும் வென்றுவிட்டது. இதுதான் தமிழ்நாடு. தமிழ்நாடு மக்களை வணங்குகிறோம். தமிழ்நாடு மக்கள் ராணுவ வீரர்களின் உடலை பார்த்து கண்ணீர்விட்டதும், கடைகளை சுயமாக மூடியதும் வியக்க வைக்கிறது.
|
தமிழ்நாடு பாராட்டு
மக்களின் ஒற்றுமையை இது காட்டுகிறது. தமிழ்நாடு மக்களுக்கு எங்களின் மிகப்பெரிய மரியாதை உரித்தாக்குகிறோம் என்று வடஇந்திய நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். பலர் இந்த இறுதி ஊர்வல வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications