வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி.. நீலகிரியில் ஷாக்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வேகத் தடையில் தனியார் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கிய போது ஸ்ட்ரெச்சருடன் நோயாளி வெளியே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அப்போது குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி, இறங்கியது.

அப்போது, ஆம்புலன்ஸின் பின் கதவு திறந்து, ஸ்டெச்சருடன் நோயாளி ரோட்டில் விழுந்தார். இதனை கண்ட பொதுமக்கள் பதறிப் போய், பின்னால் வந்த வாகனங்களை உடனே நிறுதினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் கூச்சல் போட்டு ஆம்புலன்ஸை நிறுத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிர்காக்கும் வாகனமாக செயல்படும் ஆம்புலன்ஸ் மூலமே அசம்பாவிதம் நேர இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ்களை சரியாக பராமரிக்கப்படாததால்தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications