குன்னூருக்குள்ளே சர்ப்ரைஸ் விஐபி.. வீட்டு வாசலில் நின்ற கருகரு உருவம்! ஒரே நொடியில் நடுங்கிய நீலகிரி
ஊட்டி: குன்னூரில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று, கடந்த 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, அடர்ந்த வனங்கள் சூழ்ந்த இடமாகும்.. அதனால் யானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நிறையவே இந்த மலை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது இந்த விலங்குகள் ஊருக்குள்ளும் நுழைந்து விடுகின்றன.

விலங்குகள்: இதில் ஊருக்குள் பெரும்பாலும் நுழைவது கரடிகளாகவே உள்ளன.. இதற்கு அடுத்தபடியாக பைசன் எனப்படும் காட்டெருமைகளும் சாலைகளில் அடிக்கடி உலாவரும்.
ஆனால், கரடிகளின் அட்டகாசத்தைதான் தடுக்கவே முடிவதில்லை. அதிலும், குன்னூர் பகுதிகளுக்குள் நிறைய கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துவிடுவது இயல்பாகிவிட்டது..
கோயில்கள்: பூட்டியிருந்த கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும் விடுகின்றன.. கோயில்கள் எங்காவது கண்ணில் தெரிந்தால், உடனே அந்த கோயிலுக்குள்ளும் நுழைந்து, அங்கே ஏற்றி வைத்திருக்கும் விளக்குகளையும் கீழே தள்ளி விடுவதுடன், அந்த விளக்குகளில் உள்ள எண்ணெய்களையும் மொத்தமாக குடித்துவிட்டுதான், நடையை கட்டுகின்றன. கரடிகள் எண்ணெய் குடிக்கும் என்ற சமாச்சாரமே இப்போதுதான் தெரியவந்துள்ளது.
இப்போது கோடைக்காலம் என்பதாலும், நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளவும், தண்ணீரை தேடி நிறைய கரடிகள் வர துவங்கியிருக்கின்றன.. 2 நாட்களுக்கு முன்புகூட குன்னூருக்கு அழையாவிருந்தாளியாக கரடி ஒன்று வந்துளளது..
பஸ் ஸ்டாண்டு: குன்னூர் பஸ் ஸ்டாண்டு பக்கத்திலேயே தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இந்த இடத்தில்தான், அந்த கரடி சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது.. பிறகு, அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது..
ஒரு வீட்டின் பின்புற வாசலுக்கு சென்று, அங்கிருந்த கேட் அருகில் நின்றுள்ளது. பின்னர், அந்த கேட்டைதிறக்க முயற்சி செய்தது. ரொம்ப நேரமாக முயற்சித்தும், அந்த கேட்டை கரடியால் திறக்கவே முடியவில்லை..
அதனால் டயர்ட் ஆகிப்போன கரடி, அந்த வீட்டின் முன்பக்கம் வந்து, வாசலிலேயே படுத்து தூங்கிவிட்டது. பிறகு, விடிகாலை நேரத்தில், அந்த வழியாக வந்த வாகனங்கள் சத்தம் கேட்கவும், கண்விழித்து பார்த்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு போய்விட்டது.
வீடியோ: யதேச்சையாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை பார்த்தபோதுதான், கருகருன்னு வாசற்படியில் அந்த கரடி படுத்து தூங்கியது தெரியவந்தது. இதைப்பார்த்து பதறிப்போன மக்கள், இப்படி குடியிருப்பு பகுதிக்கு வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.. இந்த 2 நாட்களாகவே, வீட்டு வாசற்படியில் ரெஸ்ட் எடுத்த கருகரு கரடியின் வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications