இதென்ன கடா மீசை? கண்டித்த நீதிபதி.. நெளிந்த “போலீஸ்” - சிங்கம் சூர்யாபோல் வந்தவருக்கு குட்டு
நீலகிரி: மாவட்ட நீதிமன்றத்தில் சிங்கம் சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த போலீசை நீதிபதி கண்டித்ததால் அவர் மீசை திருத்திக்கொண்டு வந்தது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதி. அங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராஜேஷ் கண்ணன் சிங்கம் சூர்யாபோல் மீசையை வைத்திருந்தார். இந்த நிலையில் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நீலகிரி மாவட்ட அமர்வு முன் காவலர் ராஜேஷ் கண்ணன் ஆஜராகினார்.
அப்போது அவரை கண்ட நீதிபதி முருகன், இதுபோல் மீசை வைக்க உயர் அதிகாரிகளிடம் முறையாக தகவல் தெரிவித்து இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். தகவல் தெரிவிக்கவில்லை என்றால் மீசையை திருத்தம் செய்யுமாறும் நீதிபதி அவரை கண்டித்தார்.

அதிர்ச்சியடைந்த காவலர் ராஜேஷ் கண்ணன், நீதிமன்றத்தை விட்டு வெளியே சென்று சலூன் கடையில் மீசையை முறையாக வெட்டி சரிசெய்துவிட்டு நீதிமன்றம் வந்தார். இதன் காரணமாக நீலகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சிங்கம் படம் வெளியான பிறகு போலீசார் பலர் அதை தங்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தடாலடியான நடவடிக்கைகளில் இறங்குவதும், மீசையை அவரை போன்றே வைத்துக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டனர். படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த முறை இன்னும் மாறவில்லை.
ஊருக்கு ஒரு காவலர் சிங்கம் சூர்யாவைபோல் கடா மீசை வைத்துக்கொண்டிருப்பதை காண முடியும். "காவல்துறையில் உள்ள காவலர்கள், அதிகாரிகளின் தோற்றம் அடையாள அட்டையில் இருப்பதைபோன்றே இருக்க வேண்டும். அதற்கு மாறாக போலீசார் மொட்டை அடிப்பதாகவோம், பெரிய மீசை வைப்பதாகவோ இருந்தால் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்." என காவல் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications