ஸ்ட்ராங் ரூமில் வீக் ஆன CCTV? இது தான் நடந்தது..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த விளக்கம்! இதுதான் நடந்ததா?
நீலகிரி: வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி கேமரா ஒளிபரப்பு தடைபட்ட விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார். இந்நிலையில் 100% பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைக்கான முதற்கட்ட தேர்தலில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவில் மொத்தமாக 70.93 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இதனையடுத்து வாக்குப்பெட்டிகள் துணை ராணுவம் மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பலத்த பாதுகாப்புடன் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பின் கீழ் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ராங் ரூம்: கடந்த 20ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.அருணா மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 163 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் காட்சிப்பதிவு திரையில் தெரியும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்ப கோளாறு: இதனை பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள் 24 மணி நேரமும் கண் அயராமல் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி பதிவுகளை காணக்கூடிய காட்சித் திரை தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திடீரென கறுப்பு நிறத்தில் காட்சியளித்தது. இச்சம்பவத்தால், கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது. காட்சிகள் பதிவாகக்கூடிய பெட்டி சூடான காரணத்தினால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது.
விளக்கம்: அந்த தொழில்நுட்ப கோளாறு சுமார் 20 நிமிடத்தில் சரிசெய்யப்பட்டு மீண்டும் அந்த காட்சி திரைகள் செய்லபட தொடங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளையில், கண்காணிப்பு பதிவுகள் அனைத்துமே பதிவாகி உள்ளது, அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அளித்துள்ளார். அதில், 100 சதவீதம் பாதுகாப்பு குறைபாடு இருக்க வாய்ப்பில்லை எனவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன, சந்தேகம் கொள்ள தேவையில்லை எனவும், சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.
சிசிடிவி கேமராக்கள்: மேலும் அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துள்ளன எனவும், சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி கேமரா ஒளிபரப்பு தடைபட்ட விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்க அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications