சிக்கல் தீர்ந்தது! நீலகிரியில் ஆ.ராசா வேட்பு மனு ஏற்பு.. அதிமுக வேட்பாளரின் மனுவும் ஏற்பு!
நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மறுபரிசீலனைக்குப் பிறகு இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் துவங்கியது. வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) நிறைவடைந்தது. மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
கோவையில் போட்டியிடும் அண்ணாமலை, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் ஜாதி சான்றிதழ் குறித்து சில சந்தேகங்களை எழுப்பி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி (தனி) தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் வேட்பு மனு பரிசீலனையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேசமயம் திமுக வேட்பாளர் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் ஆ.ராசா வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. நீலகிரி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. நீலகிரியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மறு பரிசீலனைக்குப் பிறகு இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications