உறுதிமொழி ஏற்க கையை நீட்டிய உடன்பிறப்பு.. வளையலை கழற்றி விளையாடிய திமுக கவுன்சிலர்? அண்ணாமலை அட்டாக்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னுரில் திமுகவினர் கையை நீட்டி இந்தி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் என்பவர் அங்கிருந்த பெண் ஒருவரின் கையில் இருந்த வளையலை விளையாட்டுத்தனமாக கழற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வளையலை கழற்ற முயன்ற போது, அதை அந்த பெண் சிரித்துக் கொண்டே தட்டிவிடுவதாக வீடியோ உள்ளது. இதை வைத்து திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக, கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறது.. மும்மொழி கொள்ளையுடன் கூடிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.. அதேபோல் இந்தி என்பதை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய பாடமாக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறி வருகிறது.. அதேநேரம் மத்திய அரசோ, இந்தி என்று நாங்கள் கூறவில்லை.. மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி படித்தால் போதும் என்று தான் கூறி வருகிறது.. அதேநேரம் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றால், அது இந்தியில் தான் முடியும் என்றும் திமுகவினர் நம்புகிறார்கள்..

இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு, மத்தியில் உள்ள பாஜக அரசு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினே, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.. புள்ளி விவரங்களை வெளியிட்டு, வட மாநிலங்களில் மற்ற மொழிகள் அழிந்துள்ளததாக கூறி வருகிறார். அதேநேரம் மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசோ, இந்தியை தாங்கள் திணிக்கவில்லை என்றும், சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்தி படிக்கும் போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை மட்டும் படிக்க விடாமல் தடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகிறது. மொழியை வைத்து திமுக அரசியல் செய்வதாக குற்றம் சாட்டி வருகிறது.
இரு தரப்புமே மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டங்களை திமுகவினர் பல்வறு ஊர்களில் முன்னெடுத்து வருகிறார்கள். தபால் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிப்பது, ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிப்பது போன்ற போராட்டங்களை திமுகவினர் கடந்த வாரம் மேற்கொண்டனர். தற்போது இந்தி எதிர்ப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு போராட்டத்தையும் நடத்தினார்கள்..
அப்படி நீலகிரி மாவட்டம் குன்னுரில் திமுகவினர் கையை நீட்டி இந்தி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் என்பவர் அங்கிருந்த பெண் ஒருவரின் கையில் இருந்த வளையலை விளையாட்டுத்தனமாக கழற்றியதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
விளையாட்டுத்தனமாக வளையலை கழற்றிய போது, அவர் சிரித்துக் கொண்டே தட்டிவிடுகிறார்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. என்னதான் விளையாட்டுத்தனம் என்றாலும், பொதுவெளியில் இந்த செயல் அநாகரீகம் என்று கூறி விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த பாஜகவினர் மற்றும் அதிமுகவினர், திமுக கவுன்சிலரின் செயலை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் திமுக கவுன்சிலரின் வீடியோவை வெளியிட்டு, கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications