நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்தது வாட்டர் ஏடிஎம்.. 1 லிட்டர் தண்ணீர் 1 ரூபாய்தான்.. அரசு அசத்தல் அறிமுகம்

Google Oneindia Tamil News

ஊட்டி: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஏடிஎம் குடிநீர் மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த ஏ.டி.எம் குடிநீர் மையங்கள் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

Drinking water ATMs set up in Coimbatore districts

முன்னதாக, உதகமண்டலம் பகுதிக்குட்பட்ட 10 இடங்களிலும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 4 இடங்களிலும், கூடலூர் நகராட்சியிலுள்ள 6 இடங்களிலும், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலும், 11 பேரூராட்சிகளிலும் சுற்றுலாத்துறை சார்பில் 70 குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டன.

மேலும் தொட்டப்பட்ட, ஊட்டி படகு இல்லம், ஊட்டி பூங்கா பகுதிகள், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் எரிக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரர் முகமது அனீஸ் வீடு.. பிஎஸ்எப் தரப்போகிறது கல்யாண பரிசுடெல்லியில் எரிக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரர் முகமது அனீஸ் வீடு.. பிஎஸ்எப் தரப்போகிறது கல்யாண பரிசு

எளியோரின் தண்ணீர் தாகத்தை போக்கும் குடிநீர் ஏடிஎம் திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும், கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் கோடைகாலம் துவங்கவுள்ளதால், மக்கள் தண்ணீர் பருகுவதற்கு கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 130 பகுதிகளில் இந்த குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டங்களில் அமைக்கப்படும் குடிநீர் ஏடிஎம் மையங்களில் ஒரு லிட்டர் குடிநீர் ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படும்.

English summary
Drinking water ATMs set up in Coimbatore districts cost Rs.1 Will be sold for 1 litre of water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X