ஊட்டியே மாறப்போகுது.. மீட்கப்பட்ட நிலத்தில் பிரமாண்ட பசுமை பூங்கா.. உடனே வேலைகளை ஆரம்பித்த அரசு!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் மீட்கப்பட்ட குதிரை பந்தய மைதானத்தில் பிரமாண்ட சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 130 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் என்ற தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தது. இந்நிலையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கட்டாமல் இருந்து வந்தது.

இதுவரை 822 கோடி அளவில் குத்தகை தொகை நிலுவையில் வைத்துள்ளது மெட்ராஸ் ரேஸ் கிளப். கடந்த பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தாத நிலையில், அதை வசூலிக்கும் முயற்சியில் அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குத்தகை விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அந்த நோட்டீசுக்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகம் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மெட்ராஸ் ரேஸ் கிளப் நிறுவனம், குத்தகை பாக்கியை அரசுக்கு உடனே செலுத்த வேண்டும் என்றும், குத்தகை பாக்கியை செலுத்த தவறும் பட்சத்தில் அதனை கையகப்படுத்தி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்த நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அங்கிருந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.
ரூ 822 கோடி குத்தகை பாக்கி! ஊட்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சீலை வைத்த வருவாய்த் துறை
ஊட்டி குதிரை பந்தய மைதானம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் தோட்டக்கலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பூங்கா அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உதகையில் மீட்கப்பட்ட குதிரை பந்தய மைதானத்தில் பிரமாண்ட சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியில் தாவரவியல் பூங்காவை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகருக்கு மத்தியில் ஒரு அருமையான சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications