ஊட்டி அருகே எஸ்கேப் சாலை? சிக்கிய வாகனத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பல லட்சம் செலவில் கடத்தல் சாலை அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓவேலி சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் வருவதை தவிர்க்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 'சில்வர் ஓக்' மரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முழுமையாக வனப்பகுதியில் இருக்கிறது என்றால் அது நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே இருக்கிறது. நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அற்புதமான பகுதியாகும். தேயிலைக்காடுகள் அதிகம் நிறைந்த குளுகுளு பகுதியான நீலகிரி இயற்கையாகவே அமைந்த சுற்றுலா தலங்களை உள்ளடக்கியதாகும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் வனப்பகுதியில் உள்ள மாவட்டம் என்பதால் இங்கு காட்டு யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இருக்கின்றன.

நீலகிரி மலையில் சந்தன மரம், ரோஸ்வுட் உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த மரங்கள் பொக்கிசம் போல் திகழ்கின்றன. இத்தகைய விலை உயர்ந்த மரங்களை வனத்துறையினரை ஏமாற்றிவிட்டு வெட்டுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் விலையுயர்ந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்துவதை தடுத்து நிறுத்த வனப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதேநேரம் சிலர் பட்டா நிலங்களிலும் சில்வர் ஓக் எனும் மரங்களை வளர்க்கிறார்கள். இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்ய வருவாய் மற்றும் வனத்துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதன் காரணமாக சோதனைச்சாவடிகளில் சில்வர் ஓக் மரங்களை விற்பனைக்காக கொண்டு செல்லும் நபர்களின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வாடிக்கை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன் அனுமதி பெற்றுவிட்டு சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக சில்வர் ஓக் மரங்களை வெட்டி, இரவு நேரத்தில் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கேரளாவிற்கு கடத்த முயற்சிக்கிறார்கள். அதனை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்கிறார்கள்.
இந்தநிலையில் ஓவேலியில் போலீஸ் மற்றும் வனத்துறை அமைத்துள்ள சோதனைச்சாவடி வழியாக வராமல் மாற்றுப்பாதையில் சட்டவிரோதமாக லாரியில் சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அந்த லாரியில் சில்வர் ஓக் மரக்கட்டைகள் இருந்தன. இதுதொடர்பாக லாரிக்குள் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சளிவயலை சேர்ந்த சுலைமான்(வயது 59), அனிஷ்(32), 1-ம் மைலை சேர்ந்த அறிவழகன்(41) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் அனுமதி இன்றி சட்டவிரோதமாக ஓவேலியில் இருந்து கேரளாவுக்கு சில்வர் ஓக் மரங்களை வெட்டி கடத்தி செல்வதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து லாரியுடன் சில்வர் ஓக் மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே'சில்வர் ஓக் மரங்களை வெட்டி கடத்த முயன்ற லாரி வந்த மாற்றுப்பாதை சாலையானது, கூடலூர் பகுதியில் விதிமுறைகளை மீறி பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலை மக்களுக்கு பயன்படாது என்கிற நிலையில், இந்த சாலை, ஓவேலி சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் வருவதை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மரங்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயலுக்காக சோதனையில் இருந்து தப்பிக்க சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் வராமல் செல்ல இந்த சாலை அமைக்கப்பட்டதா, முக்கிய நபர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications