ஊட்டி கேரட்டுக்கு அடிச்ச ஜாக்பாட்.. விலையை கேட்டா தலையே சுத்திரும்போல இருக்கே.. ஏன்னு பாருங்க!
நீலகிரி: தீபாவளி பண்டிகையையொட்டி இங்கிலீஷ் வெஜிட்டபிள் எனப்படும் ஊட்டி கேரட் விலை உச்சம் தொட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் விலையின் உயர்வுக்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க....
மலைகளின் அரசி ஊட்டியின் பெயரைக் கேட்டாலே அப்படியே மனசு குளுகுளுன்னு ஆகிவிடும். இயற்கை கொஞ்சும் அழகும், குளுகுளு காலநிலையும், உரசிச் செல்லும் பனிமூட்டமும், பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற தேயிலைத் தோட்டங்களும், யூகலிப்டஸ் மரங்களும், பைன் காடுகளும் என நம்மை வேறு உலகுக்கே அழைத்துச் சென்றுவிடும்.

நீலகிரி மாவட்டத்துக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தில் இருந்தும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அதன் இயற்கை அழகை கண்டு ரசிக்க வந்து செல்கின்றனர். பண்டிகை, பள்ளி, கல்லூரி விடுமுறை, ஹனிமூன், குடும்பச் சுற்றுலா என்றாலே அனைவரது டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்திருப்பது ஊட்டி, குன்னூராகத்தான் இருக்கும்.
அந்த அளவுக்கு எழில் கொஞ்சும் இயற்கை அமைப்பினை கொண்ட பகுதியாக விளங்கி வருகிறது. சிறுவர்களுக்கான பூங்காக்கள், தாவரவியல் பூங்கா, அருவிகள், காட்சி முனைகள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அனைத்துப் பகுதிகளும் அமைந்திருக்கும். நீலகிரியின் மற்றொரு சிறப்பு மலை ரயில்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும் அலாதியான அனுபவம் கிடைக்கும்.
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக மலைக் காய்கறி விவசாயமும், சுற்றுலா துறை தொழிலும் விளங்கி வருகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மலைக் காய்கறி சாகுபடியில் கேரட் முக்கியப் பயிராக உள்ளது.
ஊட்டி, குன்னூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்த கேரட்டுகளை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கேரட் தொழிலை சார்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளன.
சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மொத்த ஏல மண்டிகளுக்கு இங்கு விளைவிக்கப்படும் கேரட் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. கிலோ 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் நேற்று முதல் கிடுகிடுவென விலை உயர்ந்து கிலோ ரூ. 110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரட் அறுவடையைப் பொருத்தவரை ஏராளமான தொழிலாளர்கள் தேவை. தீபாவளி பண்டிகை காரணமாக தொழிலாளர்கள் பலரும் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்றுவிட்டதால் மண்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதன் காரணமாக கேரட் வரத்து சரிந்துள்ளதால் தற்போது கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த திடீர் விலை உயர்வால் நீலகிரி விவசாயிகள் செம்ம குஷியாக உள்ளனர். பண்டிகை முடிந்து தொழிலாளர்கள் வேலைக்கு வரும் நிலையில், மீண்டும் ஓரிரு நாட்களில் விலை சீரடைந்துவிடும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications