5 சிறுமிகளிடம் அத்துமீறல்.. பெட்டிக்கடை உமாமகேஷ்வரனின் கேடி வேலை! சிறுமிக்கு சபாஷ்.. நிலகிரி ஷாக்!
நீலகிரி: நீலகிரி அருகே பெட்டிக்கடை நடத்தி வந்த முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்டிக்கடைக்கு ரீசார்ஜ் செய்ய வந்த சிறுமிகளின் எண்ணை கொண்டு அவர்களிடம் ஆபாசமாக பேசி மூளைச்சலவை செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பள்ளிக்குச் சென்றால் அங்கு ஆசிரியர்களும் வீட்டில் இருந்தால் கூட நெருங்கிய உறவினர்களும் சிறுமிகளிடம் அத்துமீறுவது அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் போலீசார்.

இந்த நிலையில் நீலகிரியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. எட்டாம் வகுப்பு சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த கொடூரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரன். இவர் நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வந்திருக்கிறார். மேலும் வனத்துறையில் தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
அங்கு சில பிரச்சினைகளை சிக்கியதால் நீக்கப்பட்ட நிலையில் தனது ஊரிலேயே பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அங்கு ரீசார்ஜ் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த கடைக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக 10ஆம் வகுப்பு படிக்கும் நான்கு சிறுமிகள் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆபாசமாக மெசேஜ் செய்து வந்திருக்கிறார்.
தொடர்ந்து அவர்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்திருப்பதாகவும், இது குறித்து வெளியே சொன்னால் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவிகள் பயந்து போன நிலையில் எட்டாம் வகுப்பு சிறுமி ஒருவர் இது தொடர்பாக தனது பெற்றோர்களிடம் தைரியமாக தெரிவித்து இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து நீலகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து தகவல் தொழில்நுட்புச் சட்டம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெற்றோர் கவனம்: பெண்கள், குறிப்பாக சிறுமிகள், வீட்டுக்கு வெளியே செல்லும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர், சிறுவயது குழந்தைகளுடன் அடிக்கடி பேசிக்கொண்டு, அவர்களின் நட்பு வட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சிறுமிகளிடம் 'குட் டச் பேட் டச்' குறித்து வெளிப்படையாக பேசி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் போலீசார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications