நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2015 நாகாலாந்து ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பிபின் ராவத்!

Google Oneindia Tamil News

குன்னூர்: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த 2015 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் திமாபூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Recommended Video

    Who is Bipin Rawat| வாழ்க்கை குறிப்பு

    நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டோர் டெல்லியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்றனர்.

    கோவை மாவட்டம் சூலூர் சென்ற அவர்கள் அங்கிருந்து உயர் தொழில்நுட்பம் கொண்ட எம்ஐ ரக ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். காட்டேரி காட்டுப் பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.

     பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் ஒரு பார்வை பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் ஒரு பார்வை

    பிபின் ராவத்

    பிபின் ராவத்

    இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. பிபின் ராவத் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றனர்.

    விபத்து

    விபத்து

    இவர் ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நாகாலாந்து மாநிலம் திமாபூரில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த விபத்திலிருந்துதான் தப்பினார். அவர் அந்த நேரத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக இருந்தார்.

    ஹெலிகாப்டர் விபத்து

    ஹெலிகாப்டர் விபத்து

    திமாபூரிலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. என்ஜின் கோளாறால் ஏற்பட்ட இந்த விபத்தில் இரு விமானிகளும் ஒரு கலோனலும் உயிர் தப்பினர். பிபின் ராவத்திற்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்திற்கு ஹெலிகாப்டர் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    ஹெலிகாப்டர்

    ஹெலிகாப்டர்

    இந்த நிலையில் 6 ஆண்டுகள் கழித்து தற்போது நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன என தெரியவில்லை. ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Chief of Defence Staff General Bipin Rawat had survived a chopper crash in 2015.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X