ஆட்டுக்குட்டி நேரா பசு கிட்ட போகுது! நீலகிரி நாகராஜ் வீட்டில் ஒரே கூட்டம்.. கோத்தகிரியில் ஆச்சரியம்
ஊட்டி: தாய்மை என்ற உறவு அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் உயரிய உறவாகும்.. அதிலும், ஈன்ற தாய்க்கு இணையான மதிப்பு, பாலூட்டும் உறவுகளுக்கும் உள்ளது.. அது மனிதர்களாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி, அந்த தாய்மை உணர்வுக்கு ஈடு இணை இந்த உலகில் கிடையாது.. இந்த தாய்மையை வெளிப்படுத்தும் படியான நெகிழ்ச்சி சம்பவங்கள் நம்மை சுற்றி அடிக்கடி நடப்பதுண்டு.. அந்தவகையில் நீலகிரியில் தற்போது நடந்துள்ள சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் குள்ளபுரத்தில் நடந்த சம்பவம் மீடியாக்களிலும் செய்தியாக வெளியாகியிருந்தது. அதாவது குள்ளபுரத்தில் வசித்து வரும் கணேசன் என்ற இளைஞர், 50 ஆடுகள், 8 பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

கொட்டகையில் ஆட்டுக்குட்டி
இவர் கொட்டகையில் வளரும் ஆடு ஒன்று குட்டியை ஈன்றுள்ளது.. ஆனால் இந்த ஆட்டுக்குட்டி பிறந்ததுமே, அடுத்த ஒரு மாதத்தில் தாய் ஆடு, கழிச்சல் நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.. இதனால் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்குத் தாயாக இருந்து பால் கொடுத்து வளர்க்க துவங்கியது, அங்கிருந்த பசுமாடு.
எந்நேரமும் ஆட்டுக்குட்டியை அரவணைத்து கொண்டிருக்கும் இந்த பசு மாடு, கொட்டகையில் வளரும் மற்ற ஆட்டுக்குட்டிகளுடன் பழகுவது இல்லையாம்.. தாயை இழந்த ஆட்டுக்குட்டியுடன் மட்டுமே ஒட்டி உறவாடி தாய்மையை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறதாம்.
தாய்க்குரங்கு, பூனைக்குட்டி
இதேபோல சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே தம்பிபட்டியில் 'ரெனா நினைவு மண்டபம்" ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தை சுற்றிலும் விவசாய பண்ணை உள்ளது.
இந்த பண்ணையில் பூனை, குரங்குகள், கோழி, ஆடு, மாடு போன்றவை வளர்க்கப்படுகின்றன. அங்குள்ள பூனை, சமீபத்தில் குட்டி போடவும், இந்த பூனைக் குட்டிக்கு தாய் பூனை பாலூட்டுகிறது.. ஆனால், தாய் பூனையுடன் சேர்ந்து, ஒரு குரங்கும், பூனைக்குட்டிக்கு பால் தருகிறதாம்..
தன்னுடைய குட்டிக்கு குரங்கு பால் கொடுப்பதை பார்த்தும்கூட, அதற்கு தாய் பூனை எதிர்ப்பு காட்டவில்லை.. மாறாக தாய்க்குரங்கும், தாய்ப்பூனையும் ஒன்றாக சேர்ந்து பழக ஆரம்பித்துவிட்டன.. சில சமயம், பூனைக் குட்டியை அணைத்தவாறே, மரத்தில் ஏறி, மடியில் வைத்து பால் கொடுக்கிறதாம் தாய்க்குரங்கு.
நீலகிரி கோத்தகிரி நாகராஜ் வீடு
இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள கடசோலை கிராமத்தில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார்.. இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.
இதில் ஆடு ஒன்று, 2 குட்டிகளை ஈன்றிருக்கிறது.. இந்த குட்டிகளுக்கு தாய் ஆடு, பால் புகட்டி வந்துள்ளது.. ஆனால், அந்த ஆட்டுக்குட்டிகள், திடீரென நாகராஜ் வீட்டில் வளரும் பசு மாட்டிடம் பாலை குடிக்கத் துவங்கிவிட்டன..
தங்களது தாயை விட்டுவிட்டு தன்னிடம் வந்து பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகளை, பசு மாடு தடுக்கவில்லை... நினைத்த நேரத்தில் ஆட்டுக்குட்டிகள், பசு மாட்டின் பாலை குடித்து தங்களது பசிபோக்கி கொண்டு வருகின்றன.. இதை பார்த்து நாகராஜ் சிலிர்த்து போய் நின்றுவிட்டாராம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, அந்த பகுதி மக்களும் நாகராஜ் வீட்டுக்கு வந்து ஆச்சர்யத்துடன் ஆட்டுக்குட்டிகளை பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
சபாஷ் தாய்மை
பெற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவே சில பெண்கள் இன்றைய காலகட்டத்தில் தயங்கும்போது, ஆட்டுக்குட்டிகளுக்கு தாய்மையுடன் பசு மாடு பால் கொடுப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. தாயும் மகளுமாய் ஆட்டுக்குட்டிகளும், பசுவும் பழகி உரையாடும் காட்சி இணையத்திலும் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது..
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications